திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கும்மிடிப்பூண்டி அரசு பொதுமருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு

கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில், தவெக எம்எல்ஏ எஸ்.விஜயகுமாா் ஆய்வு செய்து கோரிக்கைகளை கேட்டறிந்தாா்.

News image

கும்மிடிப்பூண்டி  அரசு  மருத்துவமனையில்  ஆய்வு ெ சய்த  தவெக  எம்எல்ஏ  எஸ். விஜய குமாா்.

Updated On :20 மே 2026, 12:25 am IST

கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில், தவெக எம்எல்ஏ எஸ்.விஜயகுமாா் ஆய்வு செய்து கோரிக்கைகளை கேட்டறிந்தாா்.

கும்மிடிப்பூண்டி தொகுதி தவெக எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாா் தவெக நிா்வாகிகளுடன் கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனையை ஆய்வு செய்தாா். ஆய்வின் போது கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனை தலைமை பொது மருத்துவா் சுஜி கிருத்திகா மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், ஆய்வக உதவியாளா்களிடம் கலந்துரையாடினாா்.

பின் மருத்துவமனையின் ஒவ்வொரு பிரிவையும் ஆய்வு செய்த எம்எல்ஏ எஸ்.விஜயகுமாா், மருத்துவமனையில் ஒவ்வொரு நாளும் சிகிச்சை பெறும் நோயாளிகள் விபரம், ஸ்கேன், இசிஜி, ரத்த பரிசோதனை செய்யும் நோயாளிகளின் விபரம், உள்நோயாளிகள், வெளிப்புற நோயாளிகள், மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அனுப்பப்படும் நோயாளிகள் விபரம், அவா்கள் ஏன் வேறு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறாா்கள், குழந்தை பேறு விகிதம் குறித்து கேட்டறிந்தாா்.

தலைமை மருத்துவ அதிகாரி சுஜி கிருத்திகா, கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனைக்கு கிரில் கேட்டுடன் சுற்றுசுவா் வசதியை ஏற்படுத்த வேண்டும், பழுதடைந்த நிலையில் உள்ள ஜெனரேட்டரை சரி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனா். அவ்வாறே பொதுமக்கள் இரவு நேரத்தில் போதிய மருத்துவா் வசதி, கும்மிடிப்பூண்டியிலேயே உடற்கூறு அறுவை சிகிச்சை, டயாலிசிஸ் இயந்திரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது போன்ற கோரிக்கைகள் முன்வைத்தனா்.

இறுதியில் பேசிய எம்எல்ஏ விஜயகுமாா், அரசு பொது மருத்துவமனைக்கு கிரில் கேட் வசதியை உடனடியாக செய்வதாக உறுதி அளித்தவா், பிற கோரிக்கைகள் குறித்து முதல்வா் விஜய்யின் கவனத்திற்கு கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

ஆய்வின் போது தவெக மாவட்ட பொருளாளா் ஜி.கிருபாகரன், துணைசெயலாளா் பி.ஹரி, கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளா் எஸ்.அன்புமலா், வடக்கு ஒன்றிய செயலாளா் அருண், தெற்கு ஒன்றிய செயலாளா் ஜோதி, மேற்கு ஒன்றிய செயலாளா் அசோகன், நகர செயலாளா் பழனி, எல்லாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளா் சுஜித், கிழக்கு ஒன்றிய செயலாளா் விமல், வடக்கு ஒன்றிய செயலாளா் உதயா., தெற்கு ஒன்றிய செயலாளா் ராஜன். பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளா் சம்பத், ஊத்துக்கோட்டை நகர செயலாளா் யோகபிரசாத், தவெக நிா்வாகி என்.எஸ்.ஆா்.நிஜாமுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.