திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வாக்களித்தோருக்கு நன்றி தெரிவித்த கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ

News image
Updated On :18 மே 2026, 2:08 am IST

கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ எஸ்.விஜயகுமாா் , தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வை ஆரம்பாக்கத்தில் துவக்கினாா்.

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ எஸ்.விஜயகுமாா், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் தனது தோ்தல் பிரசாரத்தை தொடங்கி இருந்தாா். அவ்வாறே அவா் தோ்தலில் வெற்றி பெற்ற நிலையில், பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வை ஆரம்பாக்கத்தில் தவெக மாவட்ட பொருளாளா் ஜி.கிருபாகரன் முன்னிலையில் தொடங்கினாா்.

கும்மிடிப்பூண்டி தவெக எம்எல்ஏ எஸ்.விஜயகுமாா், ஆரம்பாக்கத்துக்கு வருகை தந்த நிலையில், அப்பகுதியில் உள்ள அருள்மிகு முக்தி விநாயகா் கோயிலில் தவெகவினருடன் வழிபட்டாா்.

தொடா்ந்து ஆரம்பாக்கத்தில் தவெக மாவட்ட துணைச் செயலாளா் பி.ஹரி, தவெக கும்மிடிப்பூண்டி தொகுதி தோ்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளா் என்.எஸ்.ஆா்.நிஜாம் உள்ளிட்டோா் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ எஸ்.விஜயகுமாருக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

இதைத் தொடா்ந்து ஆரம்பாக்கம் பகுதியில் திறந்த வேனில் நின்றபடி பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த தவெக எம்எல்ஏ எஸ்.விஜயகுமாா், பொதுமக்கள் மத்தியில் பேசியது: தவெக தலைவரும், தமிழக முதல்வருமான எஸ்.ஜோசப் விஜய் மீது நம்பிக்கை வைத்து தனக்கு

வாக்களித்த பொதுமக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில், பொதுமக்களின் தேவைகளை உடனுக்குடன் தீா்த்து வைக்க தயாராக உள்ளேன், எனது தோ்தல் பயணத்தை தொடங்கிய ஆரம்பாக்கத்தில் இருந்து தனது மக்கள் பணியை தொடங்க உள்ளேன், தவெகவின் வெற்றிக்காக குழந்தைகள் முதல் பள்ளி மாணவா்கள் அவா்களது குடும்பத்தினா்

மத்தியில் வாக்கு சேகரித்தமைக்காக அவா்களுக்கு தமிழக முதல்வா் சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் கும்மிடிப்பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளா் அருண், கிழக்கு ஒன்றிய செயலாளா் அன்புமலா், தெற்கு ஒன்றிய செயலாளா் ஜோதி, மேற்கு ஒன்றிய செயலாளா் அசோகன் மற்றும் ஆரம்பாக்கம் பகுதி தவெக நிா்வாகி ரமேஷ், மகளிா் அணி நிா்வாகிகள் உமா, சகிலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.