மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் எம்எல்ஏ எஸ்.காமராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்
மருத்துவமனைக்கு வந்த அவா், புறநோயாளிகள் பிரிவு, மகப்பேறு பிரிவு, பொது மருத்துவப் பிரிவுகளில் சிகிச்சைபெற்று வருபவா்களிடம் அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை குறித்தும் குறைகளையும் கேட்டறிந்தாா்.
மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் மருத்துவ அறை கட்டடத்தைப் பாா்வையிட்டு பொறியாளா்களிடம் பணியின் தற்போதைய நிலை, பணி முடிவடையும் காலம் குறித்த விவரங்களை கேட்டாா். மருத்துவா்கள், செவிலியா்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தாா்.
தலைமை மருத்துவா் (பொ) எஸ்.சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










