பக்ரீத் பண்டிகையையொட்டி அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மாடுகளை வெட்ட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கோவையில் பொது இடங்களில் மாடுகள் வெட்டப்படுவதை தடுக்கக் கோரி கோவையைச் சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தமிழக உள்கட்டமைப்பு வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (மே 27) கோரிக்கையாக முன்வைத்துள்ளார்.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து 4 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கியதைத் தொடர்ந்து, அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கோரிக்கை மனு முதல்வர் விஜய் வழங்கினார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (மே 27) சந்தித்துப் பேசினார்.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து 4 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கியதைத் தொடர்ந்து, அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கோரிக்கை மனு வழங்கவுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை புதுதில்லியிலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, தமிழகத்துக்கான கோரிக்கைகளை பிரதமரிடம் முதல்வர் விஜய் முன்வைத்தார்.
தமிழக அமைச்சரவையில் இரண்டு பிராமணர்கள் இடம்பெற்றுள்ளது குறித்து எதிர்நீச்சல் தொடரின் இயக்குநர் திருச்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.
சமுக நீதிகாத்த வீராங்கனை என்று ஜெயலலிதாவை நாம்தான் கூறினோம். ஜெயலலிதா பிராமணர்தானே. ஜெயலலிதாவை நம்பிய நாம் இவர்களையும் நம்மலாமே. இதில் என்ன தவறு. நல்லது நினைப்போம். நல்லதே நடக்கும் எனப் பதிவிட்டுள்ளார்.
கோடை கால சலுகையாக கியா நிறுவனம் தனது கார்களுக்கு ரூ. 2.70 லட்சம் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. இம்மாதம் கார் வாங்குபவர்கள் இந்த சலுகையை அனைத்து கிளை விற்பனை நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடத்தி முடிக்கப்பட்டு மே 4-ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்தலில் வைத்த மை, இன்னும் சிலரது விரலில் இருந்து முழுமையாக அழியாத நிலையில் 5 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடையாள ஆவணமாக ஆதார் எண் பயன்படுத்தும்போது பாதுகாப்பான முறையில் எண் மறைக்கப்பட்ட (மாஸ்க்டு) ஆதார் அட்டையைப் பயன்படுத்துவது நல்லது. எனவே மக்கள் மாஸ்க்டு ஆதார் அட்டை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று(மே 27) சந்தித்தார்.
கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் சோதனை செய்த அமலாக்கத்துறையினர் வந்த வாகனம் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.
பல்கலை. வேந்தர் விவகாரத்தில் உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் கருத்துக்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம்
திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இஸ்லாமிய சமூகத்தின் பாதுகாப்புக்காகவும் உரிமைகளுக்காகவும் தோளோடு தோள் நின்று போராடும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
அதிமுகவின் இரு தரப்பினர் வழங்கியிருக்கும் மனுக்களை பரிசீலித்து நாளை முடிவை அறிவிக்கவுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்த கருத்து வேறுபாடு நீங்கிவிட்டதாகவும், இரு அணிகளும் ஒன்றிணைந்துவிட்டதாகவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புதன்கிழமை தெரிவித்தார்.
கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா வியாழக்கிழமை ராஜிநாமா செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக தில்லி சென்றுள்ள ஜோசப் சி. விஜய்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஸ்ரீநகரில் உள்ள ஜமா மசூதியில் ஈத் பெருநாள் தொழுகை தொடர்ந்து எட்டாவது ஆண்டாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அரசு, மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு ஒரு செங்கலைக்கூட வைக்க விடமாட்டோம் என உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறினார்.
விசிகவின் நேர்மை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தெரியும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் புதன்கிழமை தெரிவித்தார்.
மேற்காசியாவில் நிலவி வரும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தைகளில் ஏற்படும் விலை ஏற்ற, இறக்கங்களின் தாக்கத்தைக் குறைக்கும் மற்றொரு நடவடிக்கையாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் புதன்கிழமை (மே 27) மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பைஜுஸ் நிறுவனர் ரவீந்திரனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவில் பல்வேறு கட்ட பேச்சுவார்தைகளுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி இணைவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக முதல்வரான பிறகு சி. ஜோசப் விஜய் இன்று(மே 27) முதல்முறையாக தில்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மே 27, புதன்கிழமை) சவரனுக்கு ரூ. 640 குறைந்துள்ளது.
பெங்களூரில் உகாண்டாவைச் சேர்ந்த 28 வயதுப் பெண்ணுக்கு எபோலா வைரஸ் தொற்று அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், சுகாதாரத் துறை அதிகாரிகள் அவரைத் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.
கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.
முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு நாளான இன்று தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இப்போதைக்கு நான் அரசியலில் ஈடுபடுவதாக இல்லை; எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாது’ - பதினாறு ஆண்டுகளுக்கு முன் தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்துவிட்டு வந்த பின் அன்றைய நடிகர் விஜய் – இன்றைய தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தெரிவித்த வரிகள்தான் இவை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




































