கோடை கால சலுகையாக கியா நிறுவனம் தனது கார்களுக்கு ரூ. 2.70 லட்சம் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. இம்மாதம் கார் வாங்குபவர்கள் இந்த சலுகையை அனைத்து கிளை விற்பனை நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.
கியா நிறுவனத்தின் காரென்ஸ், சோனட், சைரோஸ், செல்டோஸ், கார்னிவல், கிளாவிஸ் ஆகிய மாடல் கார்களுக்கு கியா அறிவித்துள்ள சலுகை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கியா கார்னிவல்
கியா கார்னிவல் மாடல் காரானது பிரீமியம் தரத்திலான கார்களின் பட்டியலில் உள்ளது. அதிக எண்ணிக்கையிலான குடும்ப உறுப்பினர்கள் செல்வதற்கு ஏற்ற வகையில் காரின் உள்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கு ரூ. 2.70 லட்சம் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய காரை கொடுத்துவிட்டு புதிய காரை வாங்குவதற்கு ரூ. 2 லட்சம் வரை கொடுக்கப்படுகிறது.
கியா காரென்ஸ் கிளாவிஸ்
கியா காரென்ஸ் மாடல் காருக்கு ரூ. 1.55 லட்சம் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெட்ரோல் காருக்கு இச்சலுகை பொருந்தும். மேலும், இந்த மாடல் காருக்கு 5 ஆண்டுகளுக்கான உத்தரவாதத்தை அளித்துள்ளது. குறிந்தபட்சமாக ரூ. 85,000 வரை சலுகை நிச்சயம் கிடைக்கும்.
கியா காரென்ஸ் கிளாவிஸ் இவி
கியா காரென்ஸ் இவி எனப்படும் மின்சார காருக்கு ரூ. 2.15 லட்சம் சலுகை உள்ளது. பழைய காரை மாற்றி புதிய காரை எடுப்பது உள்ளிட்டவற்றிற்கு இச்சலுகை பொருந்தும்.
கியா செல்டோஸ்
கியா செல்டோஸ் காருக்கு ரூ. 95,000 வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளாது. எஸ்யுவி வகை காரில் அதிகம் விற்பனையாகும் கார்களில் கியா செல்டோஸும் ஒன்றாக உள்ளது. பிரீமியம் உள்கட்டமைப்பு, நவீனமாக்கப்படட் உட்புறம் போன்றவை அதிக பயனர்களைக் கவர்ந்துள்ளது.
கியா சைரோஸ்
கியா சைரோஸ் காருக்கு ரூ. 85,000 வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ரூ. 50,000க்கான சலுகை கட்டாயம் உண்டு என கியா தெரிவித்துள்ளது.
கியா சோனட்
கியா சோனட் காருக்கு ரூ. 35,000 வரை சலுகை உள்ளது. குறைந்தபட்சமாக ரூ. 30,000 வரை சலுகை கட்டாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்யுவி பிரிவு காரில் அதிக சிறப்பம்சங்களைக் கொண்ட காராக உள்ளதால், ஹுண்டாய் வென்யூ, டாடா நெக்சான், மஹிந்திரா எஸ்யுவி 3எக்ஸ்ஓ கார்களுக்கு போட்டியாகவும் உள்ளது.
கியா காரென்ஸ்
கியா காரென்ஸ் காருக்கு ரூ. 40,000 வரை சலுகை உள்ளது. எம்பிவி வகை காரில் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் செல்லும் வகையில் உட்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகள் அடங்கிய காரை பட்ஜெட் விலையில் பெறுவதற்கு கியா காரென்ஸ் உகந்தது.
Summary
Kia Discount May 2026: Up To Rs 2.70 Lakh Off On Sonet, Syros, Seltos And More
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










