தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!

கேரளத்தில் அமலாக்கத்துறை வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பற்றி...

News image

அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல் - ANI

Updated On :27 மே 2026, 4:12 pm IST

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் சோதனை செய்த அமலாக்கத்துறையினர் வந்த வாகனம் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.

சிஎம்ஆர்எல் கனிமவள நிறுவனத்துடன் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் பினராயி விஜயனுக்குச் சொந்தமான கண்ணூர், திருவனந்தபுரம் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தினர்.

மேலும், கோழிக்கோட்டில் உள்ள முன்னாள் பொதுப்பணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும் பினராயி விஜயனின் மருமகனுமான முகமது ரியாஸ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள பினராயி விஜயன் வீட்டில் சோதனையை முடித்து வெளியேற முயன்ற அமலாக்கத்துறையினர் காரின் மீது, வெளியே கூடியிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் கற்கள் வீசித் தாக்குதல் நடத்தினர்.

இதில், அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்த கார் சேதமடைந்த நிலையில், அருகிலிருந்த தம்பானூர் காவல் நிலையத்துக்கு அதிகாரிகள் சென்றனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Summary

Raid at Pinarayi's Residence - Attack on Enforcement Directorate Vehicle

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.