திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வீணாவின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டது உண்மைதான்; குறுகிய மனப்பான்மையுடன் காங்கிரஸ்! பினராயி விஜயன்

அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறித்து பினராயி விஜயன் கருத்து

News image

பினராயி விஜயன் - PTI

Updated On :29 மே 2026, 12:20 pm IST

கேரள முன்னாள் முதல்வரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் வீட்டில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில், அவரது மகள் வீணா விஜயன் தொடர்புடைய ரூ. 18.36 கோடி இருப்புள்ள 242 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் 3 வங்கிக் கணக்குகள் வீணாவின் பெயரில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை குறித்து கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில்,

"சோதனையின்போது அதிகாரிகள் யாரும் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. நான் அங்கேதான் இருந்தேன்.

கேரள முதல்வர் ஏன் இதற்குப் பதிலளிக்கவில்லை என்பது அவரிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி. பாஜக சார்பில்லாத கட்சிகளுக்கு எதிராக, மத்திய பாஜக அரசு எப்போதும் கடுமையான நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகிறது.

தங்கள் கட்சிக்கு எதிராக நடவடிக்கை அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கும்போது மட்டுமே, காங்கிரஸ் எதிர்வினையாற்றுகிறது. காங்கிரஸ் கட்சியின் இந்த நிலைப்பாடு, நாட்டின் யதார்த்த சூழலுக்குப் பொருத்தமானதாக இல்லை. காங்கிரஸ் தலைமை ஒரு குறுகிய மனப்பான்மையுடனான அணுகுமுறையையே கடைப்பிடித்து வருகிறது.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட தலைவர்கள் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராகக் கடுமையாகக் குரல் கொடுத்துள்ளனர்.

வீணாவின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால், அதிகாரிகள் கூறுவதைப்போல அவருக்கு அத்தனை வங்கிக் கணக்குகள் இல்லை" என்றார்.

Summary

Congress is acting with a narrow mindset: Pinarayi Vijayan comments on ED raid

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.