6-வது சுற்று முடிவிலும் மு.க. ஸ்டாலின் பின்னடைவு! தவெக முன்னிலை!!புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி! கேரள முதல்வர் பினராயி விஜயன் பின்னடைவு!காரைக்குடியில் சீமான் தொடர்ந்து பின்னடைவு! மயிலாப்பூரில் தமிழிசை, அவிநாசி தொகுதியில் எல்.முருகன் பின்னடைவு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை பின்னடைவு திருச்சி கிழக்கு, பெரம்பூரில் விஜய் முன்னிலை சாத்தூரில் நயினார் நாகேந்திரன் பின்னடைவு, தவெக முன்னிலை
/

தமிழ்நாடு

தேர்தல் 2026: அதிகாரம் யாருக்கு? தமிழ்நாட்டில் முன்னிலையில் சதமடித்த தவெக - நேரலை

தமிழ்நாடு, புதுவை, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநில சட்டப் பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள இணைந்திருங்கள் தினமணி.காம் உடன்

தேர்தல் 2026: அதிகாரம் யாருக்கு? தமிழ்நாட்டில் முன்னிலையில் சதமடித்த தவெக  - நேரலை

தேர்தல் நேரலை - செய்திகள் உடனுக்குடன் - File photo

7:12 am, 4 மே 2026

அஸ்ஸாம்: சிவசாகர் தொகுதியில் அகில் கோகோய் முன்னிலை!

அஸ்ஸாம்: சிவசாகர் தொகுதியில் அகில் கோகோய் முன்னிலை!

அஸ்ஸாமின் சிவசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் சிவசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் ரைஜோர் தளக் கட்சியில் தலைவர் அகில் கோகோய், பாஜக போட்டியாளரான குஷால் டோவாரியை விட முன்னிலையில் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

7:11 am, 4 மே 2026

லாஸ்பேட்டை தொகுதி

லாஸ்பேட்டை தொகுதியில் என். ஆர். காங்கிரஸ் வேட்பாளர் சிவக்கொழுந்து வெற்றி.

என்.ஆர். காங்கிரஸ் - சிவக்கொழுந்து-10,578

காங்கிரஸ் - வைத்தியநாதன்-9161

தவெக - சாமிநாதன்-5647

நாதக - ஜெயசித்ரா-433

சிபிஎம் - ராஜாங்கம்-301..

1417 வாக்கு வித்தியாசத்தில் சிவக்கொழுந்து வெற்றி.

6:47 am, 4 மே 2026

திருச்சி, நெல்லை, கோவையில் முன்னிலை நிலவரம்!

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில் நெல்லை, திருச்சி, கோவையில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையில் உள்ளது.

6:46 am, 4 மே 2026

சைதாப்பேட்டை தொகுதி

சைதாப்பேட்டை தொகுதியில் 9 ஆம் சுற்று நிலவரம்: தவெக முன்னிலை

திமுக - 2503

அதிமுக - 682

தவெக- 4163

நாதக- 239

நோட்டா - 32

மொத்தம் 7678 வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தவெக 1,660 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

6:37 am, 4 மே 2026

அஸ்ஸாமில் பின்தங்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள்!

அஸ்ஸாமின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களான எதிர்க்கட்சித் தலைவர் தேபப்ரதா சைகியா, அகில் கோகோய், லுரின்ஜோதி கோகோய், ஜகதீஷ் புயான் மற்றும் ராஜன் கோஹைன் உள்ளிட்ட அனைவரும், தத்தமது தொகுதிகளில் பின்தங்கியுள்ளதாக வெளியான தேர்தல் ஆணையத் தரவுகள் தெரிவிக்கின்றன.

6:36 am, 4 மே 2026

அப்பாவு பின்னடைவு

திமுக சார்பில் போட்டியிட்ட சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பின்னடைவை சந்தித்துள்ளார்.

6:31 am, 4 மே 2026

பனையூரில் தவெக அலுவலகம் முன் தொண்டர்கள் கொண்டாட்டம்

சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 100 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை வகித்து வரும் நிலையில் அதன் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

6:23 am, 4 மே 2026

முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து பின்னடைவு! தவெக முன்னிலை!!

6:14 am, 4 மே 2026

திருவள்ளூர் தொகுதி

திருவள்ளூர் தொகுதியில் 6ஆவது சுற்றில் தவெக முன்னிலை

திமுக-17232

அதிமுக-15154

தவெக-18945

நாம் தமிழர் கட்சி-962

1713 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக முன்னிலை

6:13 am, 4 மே 2026

மதுரை மத்தி தொகுதி

மதுரை மத்தி 5 சுற்று முடிவில்: தவெக 9,527 வாக்குகள் முன்னிலை

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் - திமுக - 10899

சுந்தர் சி - புநீக- 10283

பதுருதீன் - தவெக - 20426

அப்துல் ஹக்கீம் - நாதக -1873

6:13 am, 4 மே 2026

திருமயம் தொகுதி

திருமயம் தொகுதியில் திமுக வேட்பாளரும் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சருமான எஸ். ரகுபதி 4ஆவது சுற்று முடிவில், 2000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

அதிமுக வேட்பாளர் வைரமுத்து இரண்டாமிடத்திலும், தவெக வேட்பாளர் சிந்தாமணி மூன்றாமிடத்திலும் உள்ளனர்.

6:06 am, 4 மே 2026

தட்டாஞ்சாவடி  தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி

தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி வெற்றி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

6:04 am, 4 மே 2026

6-வது சுற்று முடிவிலும் மு.க. ஸ்டாலின் பின்னடைவு! தவெக முன்னிலை!!

கொளத்தூர் தொகுதியில் 6-வது சுற்று முடிவிலும் மு.க. ஸ்டாலின் பின்னடைவு

6:01 am, 4 மே 2026

6-வது சுற்று முடிவிலும்ஜலுக்பரி தொகுதியில் அஸ்ஸாம் முதல்வர் தொடர்ந்து முன்னிலை!

ஜலுக்பரி தொகுதியில் ஹிமந்த பிஸ்வ சர்மா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றார்.

11 மணி நிலவரப்படி இரண்டாவது சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஹிமந்த பிஸ்வ சர்மா 1,1821 வாக்குகளும், 7,748 வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலையில் உள்ளார்.

5:39 am, 4 மே 2026

லால்குடி தொகுதி

லால்குடியில் அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் மார்ட்டின் முன்னிலை

5:39 am, 4 மே 2026

பூந்தமல்லி தொகுதி

பூந்தமல்லி தொகுதியில் 3 ஆவது சுற்றில் தவெக முன்னிலை

திமுக-10627

அமமுக-6299

நாம் தமிழர் கட்சி-1000

தவெக-19547

5:37 am, 4 மே 2026

காரைக்கால்

காரைக்கால்

நெடுங்காடு (தனி) தொகுதி முதல் சுற்றில் - வி.விக்னேஸ்வரன் (சுயேச்சை) என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் சந்திர பிரியங்காவைக் காட்டிலும் 1060 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார்.

காரைக்கால் வடக்கு முதல் சுற்றில் - பி.ஆர்.என். திருமுருகன் (என்.ஆர். காங்கிரஸ்) 2052 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எம். ரஞ்சித்தைக் காட்டிலும் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார்.

5:36 am, 4 மே 2026

திருச்சி கிழக்கு நிலவரம்:

விஜய் - 12523

திமுக இனிகோ இருதயராஜ் - 7237

அதிமுக - 3755

தவெக தலைவர் விஜய், திமுக வேட்பாளரை விட 5286 வாக்குகள் முன்னிலை.

5:36 am, 4 மே 2026

திருப்பரங்குன்றம் தொகுதி

திருப்பரங்குன்றம் தொகுதி - சுற்று 2 முடிவு

த.வெ.க முன்னிலை

திமுக - 2802

அதிமுக - 1842

த.வெ.க - 3487

நாதக - 557

அஇபுதமமக - 29

நோட்டா - 44

5:26 am, 4 மே 2026

அஸ்ஸாமில் பாஜக தொடர்ந்து முன்னிலை

அஸ்ஸாமில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. காலை 10.25 மணி நிலவரப்படி, என்டிஏ 88 தொகுதிகளில் முன்னிலை வகித்த நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணி 23 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகின்றது.

5:24 am, 4 மே 2026

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்பட திமுக அமைச்சர்கள் 31 பேர் பின்னடைவு!

தமிழ்நாட்டில் 34 அமைச்சர்களில் 31 அமைச்சர்கள் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.

5:07 am, 4 மே 2026

பாஜகவின் எல். முருகன், தமிழிசை, நயினார் நாகேந்திரன் பின்னடைவு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட எல். முருகன், தமிழிசை சௌந்தரராஜன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

5:01 am, 4 மே 2026

விஜய் வீட்டுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு

தமிழ்நாட்டில் 100 தொகுதிகளில் தவெக முன்னிலையில் உள்ள நிலையில் விஜய் வீட்டுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

5:00 am, 4 மே 2026

விஜய் வீட்டுக்குதேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி,

அஸ்ஸாம் மாநிலத்தில் 24 இடங்களில் பாஜகவும் 5 இடங்களில் காங்கிரஸும் முன்னிலை.

கேரளத்தில் 42 இடங்களில் காங்கிரஸும் 21 இடங்களில் இடதுசாரிகளும் முன்னிலை.

புதுவையில் 4 இடங்களில் என். ஆர். காங்கிரஸ் 2 இடங்களில் காங்கிரஸ் கட்சி, அதிமுக ஒரு இடம், திமுக ஒரு இடத்தில் முன்னிலை.

தமிழ்நாட்டில் அதிமுக 20 இடங்களிலும், தமிழக வெற்றிக் கழகம் 18 இடங்களிலும் திமுக 9 இடங்களிலும் முன்னிலை.

மேற்கு வங்கத்தில் பாஜக 8 இடங்களிலும் திரிணமூல் காங்கிரஸ் 2 இடங்களிலும் முன்னிலை.

5:00 am, 4 மே 2026

கோவை - சிங்காநல்லூர் தொகுதி

கோவை - சிங்காநல்லூர்

சுற்று 1

தவெக முன்னிலை

அதிமுக -2623

திமுக ( காங்கிரஸ்) -2096

தவெக - 3780

5:00 am, 4 மே 2026

ஸ்ரீபெரும்புதூர் மூன்றாவது சுற்று

ஸ்ரீபெரும்புதூர் மூன்றாவது சுற்று நிலவரம்:

தவெக: 10905

அதிமுக: 8582

காங்கிரஸ்: 7557

நாதக: 832

4:53 am, 4 மே 2026

நெல்லையில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை

நெல்லையில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர்கள் முன்னிலை

4:53 am, 4 மே 2026

கோவை தெற்குதொகுதி

கோவை தெற்கு இரண்டாவது சுற்று

முன்னிலை நிலவரம்

திமுக ( செந்தில்பாலஜி ) - 7219

அதிமுக ( அம்மன் அர்சுணன் ) - 1883

தவெக ( செந்தில்குமார் ) - 6488

நாம் தமிழர் ( பேரறிவாளன் ) - 712

4:52 am, 4 மே 2026

கோவை வடக்கு இரண்டாவது சுற்று

கோவை வடக்கு இரண்டாவது சுற்று

தவெக: 3,072

தி.மு.க.: 2,771

பாஜக: 2,894

4:52 am, 4 மே 2026

காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் மற்றும் ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் தவெக தற்போது வரை முன்னிலை.

காஞ்சிபுரத்தில் அதிமுக 300 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை

4:51 am, 4 மே 2026

வால்பாறை தொகுதி

வால்பாறை முதல் சுற்று முன்னிலை

திமுக ( ஆ. சுதாகர் ) - 3665

அதிமுக ( லட்சுமண சிங் ) - 2,431

தவெக ( ஸ்ரீதரன் ) - 3121

நாம் தமிழர் ( உமா தேவி )

4:51 am, 4 மே 2026

விழுப்புரம் தொகுதி

அதிமுக வேட்பாளர் விஜயா: 3.396,

திமுக இரா லட்சுமணன்: 3077

த வெக மோகன்ராஜ்: 2862

நாதக அபிநயா: 133

4:51 am, 4 மே 2026

விராலிமலை தொகுதி

விராலிமலை தொகுதியில் முதல் சுற்றில் அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கர் 262 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

இரண்டாமிடத்தில் தவெக வேட்பாளரும், மூன்றாமிடத்தில் திமுக வேட்பாளரும் உள்ளனர்.

4:51 am, 4 மே 2026

சேந்தமங்கலம் தொகுதி முதல் சுற்று நிலவரம்:

அதிமுக - 3244

திமுக - 3049

தவெக - 3675

நாதக - 267

தவெக வேட்பாளர் பொன். சந்திரசேகர் முன்னிலை

4:47 am, 4 மே 2026

கு. செல்வப் பெருந்தகை

ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கு. செல்வப் பெருந்தகை தொடர்ந்து பின்னடைவு.

4:47 am, 4 மே 2026

திருத்துறைப்பூண்டி தொகுதி

திருத்துறைப்பூண்டி தொகுதி (முதல் சுற்று)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 3694

தவெக - 2737

அதிமுக - 1954

4:43 am, 4 மே 2026

தவெக முன்னிலை

மதுரை தெற்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு ஆகிய மூன்றிலும் தவெக முன்னிலை. அதிமுக மூன்றாம் இடம்.

கிருஷ்ணராயர் தொகுதி

கிருஷ்ணராயர் சட்டமன்ற தொகுதியில் முதல் சுற்று முடிவில் திமுக - 3181, அதிமுக - 3619, தவெக - 2089, நாம் தமிழர் கட்சி - 297.

4:43 am, 4 மே 2026

நன்னிலம் தொகுதி

நன்னிலம் தொகுதி: முதல் சுற்று

அதிமுக - 4886

தவெக - 2723

எஸ்டிபிஐ - 2106

4:43 am, 4 மே 2026

கன்னியாகுமரி: முதல் சுற்று:

கன்னியாகுமரி: முதல் சுற்று:

திமுக முன்னிலை

ரெ.மகேஷ் (திமுக): 3751

என்.தளவாய்சுந்தரம் (அதிமுக): 2482

எஸ்.ஆர்.மாதவன் (த வெ.க.): 2446

மரிய ஜெனிபர் (நாம் தமிழர்): 639

4:43 am, 4 மே 2026

காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் முதல் சுற்றில் மூன்றில் தவெக முன்னிலை.

காஞ்சிபுரம் தொகுதி மட்டும் அதிமுக முன்னிலை

4:43 am, 4 மே 2026

திருமயம் தொகுதி

திருமயம் தொகுதியில் திமுக வேட்பாளரும் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சருமான எஸ். ரகுபதி முதல் சுற்றில் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து இரண்டாமிடத்திலும், தவெக மூன்றாமிடத்திலும் உள்ளனர்.

4:42 am, 4 மே 2026

குளித்தலை தொகுதியில் முதல் சுற்று:

தவெக-3793

திமுக -2948

அதிமுக -2456

நாம் தமிழர் கட்சி-555

குளித்தலை தொகுதியில் தவெக வேட்பாளர் 844 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

4:42 am, 4 மே 2026

பாலக்கோடு தொகுதி

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் முதல் சுற்றில் திமுக வேட்பாளர் முன்னிலை.

திமுக- 3601

அதிமுக -3517

தவெக-2471

நாதக -199

4:42 am, 4 மே 2026

காட்பாடி சட்டமன்ற தொகுதி (அதிமுக முன்னிலை)

முதல் சுற்று

அதிமுக: 3836

திமுக: 2657

தவெக: 2319

வித்தியாசம் 1181

4:41 am, 4 மே 2026

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி

திமுக - 3181

அதிமுக- 3689,

தவெக-2089,

நாம் தமிழர் கட்சி-438

அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் 58 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

4:33 am, 4 மே 2026

திமுக கோட்டை தகர்கிறது!

சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்றுள்ளது.

4:26 am, 4 மே 2026

ஆலங்குடி

முதல் சுற்றில் ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும் மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சருமான சிவ.வீ. மெய்யநாதன் 160 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

தவெக இரண்டாமிடத்திலும், அதிமுக மூன்றாமிடத்திலும் உள்ளன.

4:25 am, 4 மே 2026

அரியலூர் சட்டமன்றம்

முதலாம் சுற்று எண்ணிக்கை :

முன்னிலை கட்சி : அதிமுக

வாக்குகள் :1289

தாமரை. ராஜேந்திரன் (அதிமுக) :4506

லதா பாலசுப்ரமணியன் (திமுக):3217

சிவக்குமார் (தவெக): 2565

புகழேந்தி (நாம் தமிழர்) :335

4:10 am, 4 மே 2026

விழுப்புரம் அதிமுக முன்னிலை

விழுப்புரம் அதிமுக வேட்பாளர் விஜயா 3396

திமுக இரா லட்சுமணன் 3077

த வெக மோகன்ராஜ் -2862

நாதக அபிநயா -133

4:09 am, 4 மே 2026

திருப்பூர்: முதல் ரவுண்ட் முடிவு - பல்லடம் தவெக முன்னிலை

திமுக க.செல்வராஜ் 1726

அதிமுக பரமசிவம் 2791

தவெக ராம்குமார் 2805

4:08 am, 4 மே 2026

செங்கோட்டையன் முன்னிலை

கோபி செட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதியில் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் முன்னிலையில் உள்ளார்.

4:07 am, 4 மே 2026

பெருந்துறை தொகுதி- முதல் சுற்று- அதிமுக முன்னிலை

எஸ்.ஜெயக்குமார்(அதிமுக)-3388

தோப்பு வெங்கடாச்சலம்(திமுக) 2685

வி.பி.அருணாச்சலம்(தவெக) 2065

சி.லோகநாதன்(நாதக) 345

நோட்டா-32

வித்தியாசம்-703

4:00 am, 4 மே 2026

விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் முன்னிலை!

விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் முன்னிலையில் உள்ளார்.

விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகர் முன்னிலையில் உள்ளார்.

3:58 am, 4 மே 2026

அமைச்சர்கள் பின்னடைவு

தமிழ்நாடு அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, எ.வ. வேலு, அன்பில் மகேஸ், மா. சுப்பிரமணியன், கீதா ஜீவன், தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

3:56 am, 4 மே 2026

செந்தில் பாலாஜி முன்னிலை

கோவை தெற்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் உள்ளார்.

3:55 am, 4 மே 2026

முதல்வர் ஸ்டாலின் பின்னடைவு

கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பின்னடைவை சந்தித்துள்ளார்.

3:44 am, 4 மே 2026

காலை 08.02 மணிக்கு தபால் வாக்குகள் முடிவு வெளியானது

முதல் சுற்று. 8.35. AM

2-வது சுற்று. 9.10. AM

3-வது சுற்று. 9.45. AM

4-வது சுற்று. 10.20. AM

5-வது சுற்று. 11.00 AM

6-வது சுற்று. 11.30 AM

7-வது சுற்று 12.05 PM

8-வது சுற்று 12.40 PM

9-வது சுற்று 01.15 PM

10-வது சுற்று 01.50 PM

11-வது சுற்று 02.20 PM

12-வது சுற்று 03.00 PM

13-வது சுற்று 03.20 PM

14-வது சுற்று 03.40 PM

15-வது சுற்று. 04.00 PM

மாலை 5.00 மணிக்குள் 234 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும்.

3:42 am, 4 மே 2026

திருப்பரங்குன்றம் தொகுதியில் முதல் வாக்கே செல்லாத வாக்கு!

தமிழ்நாட்டில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் முதல் வாக்கே செல்லாத வாக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் திருப்பரங்குன்றம் தொகுதிக்கான தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முதல் தபால் வாக்கில் இரண்டு பேப்பர்களில் ஒரு பேப்பர் இல்லாத நிலையில் செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் முதல் ஓட்டு செல்லாத ஓட்டாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

3:19 am, 4 மே 2026

மேட்டுப்பாளையம் தொகுதி முதல் சுற்றுவாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் கவிதா கல்யாண சுந்தரம் முன்னிலை

3:19 am, 4 மே 2026

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ் பி வேலுமணி முன்னிலை. இரண்டாவது இடத்தில் தவெக.

மூன்றாம் இடத்துக்கு தள்ளப்படும் திமுக

3:09 am, 4 மே 2026

புதுச்சேரி தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன

புதுச்சேரி 30 சட்டமன்ற தேர்தலுக்கான தபால் ஓட்டுகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் முதல் கட்டமாக காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. முன்னதாக அனைத்து தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு அதிகாரிகள் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து தற்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

3:09 am, 4 மே 2026

காஞ்சிபுரத்தில் தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் காப்பு அறை சீல் அகற்றி , தபால் வாக்கு என்னும் பணியை தற்போது துவக்கி உள்ளனர்.

தபால் வாக்கு எண்ணிக்கை நிகழ்வில், பதிவு குறித்து முறையாக தெரிவிக்காததால் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் பாமக மற்றும் திமுக கடும் வாக்குவாதம்..

2:54 am, 4 மே 2026

62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை

தமிழகம் முழுவதும் 62 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

மின்னணு இயந்திரங்களில் வாக்குகளை எண்ணுவதற்கு 234 வாக்கு எண்ணும் அறைகள் தயாராக உள்ளன. தபால் வாக்குகளை எண்ண கூடுதலாக 240 அறைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

2:34 am, 4 மே 2026

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

தமிழ்நாடு, புதுவை, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

2:32 am, 4 மே 2026

யாா் ஆட்சி?

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், தேமுதிக, விசிக, மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிட்டன. நாம் தமிழா், தவெக ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிட்டன.

2:22 am, 4 மே 2026

இன்று எண்ணப்படும் 4.87 கோடி வாக்குகள்! 

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக, அதிமுக, புதிதாக களம் கண்ட தவெக, நாம் தமிழா் கட்சி என நான்குமுனைப் போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 234 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது.

2:22 am, 4 மே 2026

தமிழகத்தில் யாா் ஆட்சி?

தமிழகத்தில் அடுத்து யாா் ஆட்சியமைக்கப் போகிறாா்கள் என்கிற பெரும் எதிா்பாா்ப்புக்கு மத்தியில், 234 பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் திங்கள்கிழமை (மே 4) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.