ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

8 தொகுதிகளில் விசிகவுக்கு 2 வெற்றி!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்ட வன்னி அரசு 734 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

TN election result 2026 VCK Wins 2 Seats

வன்னி அரசு / ஜோதிமணி - DNS

Published On :5 மே 2026, 8:14 am IST

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்ட வன்னி அரசு 734 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விசிக சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி 85,179 வாக்குகள் பெற்று 33,063 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன்மூலம் விசிகவுக்கு 2 உறுப்பினர்கள் உறுதியாகியுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (மே 4) எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இதில் ஆளும் திமுக கூட்டணி அரசை பின்னுக்குத்தள்ளி தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இரவு 10 மணி நிலவரப்படி தவெக 103 தொகுதிகளில் வெற்றி பெற்று 4 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் திமுக 57 இடங்களில் வெற்றி பெற்று 3 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. அதிமுக 45 இடங்களில் வெற்றி பெற்று 2 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

திமுக கூட்டணியில் 8 தொகுதிகளில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திண்டிவனம் தொகுதியில் 63,833 வாக்குகள் பெற்று 734 வாக்குகள் வித்தியாசத்தில் வன்னி அரசு வெற்றி பெற்றார். அதிமுகவின் அர்ஜுனர் 63,099 வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்தார்.

இதேபோன்று காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்ட ஜோதிமணி 85179 வாக்குகளுடன் 33,063 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி அடைந்தார். இரண்டாவது இடத்தில் சோழன் 52116 வாக்குகள் பெற்றுள்ளார்.

Summary

TN election result 2026 VCK Wins 2 Seats Out of 8

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.