ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து பின்னடைவு! தவெக முன்னிலை!!

கொளத்தூர் தொகுதியில் 7-வது சுற்று முடிவிலும் மு.க. ஸ்டாலின் பின்னடைவு...

TN Election Results 2026: MK stalin trailing in kolathur constituency

மு.க. ஸ்டாலின் - MK stalin

Published On :4 மே 2026, 1:33 pm IST

5-ஆவது சுற்றுகளின் முடிவில் திமுக முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் தொடந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

காலை 11 மணி நிலவரப்படி தவெக 107, அதிமுக 74, திமுக 53 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. திமுக 3-ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் 5 ஆவது சுற்று முடிவிலும் பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.

தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு 20,504 வாக்குகளும் முதல்வர் மு.க. ஸ்டாலின் 17,975 வாக்குகளும் பெற்றுள்ளார். 2,529 வாக்குகள் வித்தியாசம்.

தொடர்ந்து 6 ஆவது சுற்று முடிவிலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவைச் சந்தித்து வருகிறார். தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

7 ஆவது சுற்று முடிவில் 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பின்னடைவில் உள்ளார்.

திமுக அமைச்சர்கள் பலரும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.

Summary

TN Election Results 2026: MK stalin trailing in kolathur constituency

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.