ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இன்றைய செய்திகள் ஜூலை 24 - நேரலை

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...

Sonam wangchuk

சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டார் - x

Published On :24 ஜூலை 2026, 8:02 pm IST
2:32 pm, 24 ஜூலை 2026

ஜன நாயகன் படத்தை நாளை மீண்டும் பார்க்கும் முதல்வர் விஜய்!

ஜன நாயகன் படத்தை முதல்வர் விஜய் நாளை(சனிக்கிழமை) மீண்டும் பார்க்கவுள்ளார்.

1:05 pm, 24 ஜூலை 2026

ஜன நாயகன் பார்க்கையில் என்னை அறியாமல் கண்ணீர் வந்தது: அமைச்சர் விக்னேஷ்

ஜன நாயகன் படம் பார்க்கையில் என்னை அறியாமல் கண்ணீர் வந்தது என்று அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துளளார்.

10:45 am, 24 ஜூலை 2026

மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வினாத்தாள் கசிவைத் தடுக்க 'பொதுத் தேர்வுகள் 'பொதுத் தேர்வுகள் (முறையற்ற வழிமுறைத் தடுப்பு) சட்டம், 2024-ல் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

7:43 am, 24 ஜூலை 2026

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு! 

5-வது நாளாக எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

7:43 am, 24 ஜூலை 2026

ஜன நாயகன் படம் பார்த்தால்..... ஜேசிடி பிரபாகர் கருத்து!

ஜன நாயகன் படத்திற்கும் மாணவர்களின் போராட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் கருத்து...

7:43 am, 24 ஜூலை 2026

ஆக. 3 -ல் கர்நாடகம் செல்கிறார் முதல்வர் விஜய்!

தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் வருகிற ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகம் செல்லவிருப்பதாக அமைச்சர் வினோத் தகவல் தெரிவித்துள்ளார்.

7:43 am, 24 ஜூலை 2026

நீட் தேர்வு: தமிழகத்தில் வலுக்கும் எதிர்ப்பு!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

7:37 am, 24 ஜூலை 2026

காங்கிரஸ் எம்பி விமர்சனம்

மத்திய அரசுடன் சோனம் வாங்சுக் ரகசிய ஒப்பந்தம் செய்திருப்பதாக காங்கிரஸ் எம்பி இம்ரான் மசூத் விமர்சித்துள்ளார்.

7:36 am, 24 ஜூலை 2026

ஜேஎன்யு, தில்லி பல்கலை. எச்சரிக்கை

ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகமும் (ஜேஎன்யு) தில்லி பல்கலைக்கழகமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

5:36 am, 24 ஜூலை 2026

செந்தில் பாலாஜி நீதிமன்றம் வருகை

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் முன்ஜாமீன் உத்தரவை பெறுவதற்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜரானார்.

5:36 am, 24 ஜூலை 2026

கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா?

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் இன்று பகல் 12.30 மணிக்கு மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டாவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்கின்றனர்.

5:36 am, 24 ஜூலை 2026

தூத்துக்குடி காவல் மரணம்

தூத்துக்குடியில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது உயிரிழந்த இளைஞர் அருணாச்சலத்தின் உடல் உடற்கூராய்வுக்குப் பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

5:36 am, 24 ஜூலை 2026

அதிரடி சரிவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 24) சவரனுக்கு ரூ. 2,160 குறைந்துள்ளது.

5:36 am, 24 ஜூலை 2026

ராகுல் காந்தி காட்டம்

தர்மேந்திர பிரதானை பதவியிலிருந்து நீக்குங்கள், மாணவர்களை தாக்கியவர்களை தண்டியுங்கள் என்றும் நள்ளிரவில் வீடியோ வெளியிட்டு மாணவர்களை போராட்டத்தை அவமதிக்க வேண்டாம் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

5:36 am, 24 ஜூலை 2026

அசாதாரணமான தைரியம்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை, ஜந்தர் மந்தரில் எங்களின் அமைதியான போராட்டம் தொடரும் என்று அக்கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.

5:36 am, 24 ஜூலை 2026

உண்ணாவிரதத்தை முடித்தார் சோனம்

மத்திய அமைச்சா்கள் ஜெ.பி.நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோா் சந்தித்து சோனமிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அவர் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

5:36 am, 24 ஜூலை 2026

அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் வெள்ளிக்கிழமை(ஜூலை 24) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி செல்ஃபி விடியோ மூலம் விளக்கமளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.