ஒரு மாத தலைமறைவுக்கு பின் செந்தில் பாலாஜி நீதிமன்றம் வருகை!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பது பற்றி...

முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி - கோப்புப்படம்
குதிரை பேர வழக்கில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்து, முன் ஜாமீன் பிணை செலுத்தினார்.
ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாக, சென்னை திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிந்து, 14 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி, கடந்த 8 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.
உத்தரவு நகல் கிடைத்த 15 நாள்களில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்து 25 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இருநபர் ஜாமீனும் செலுத்த வேண்டும் எனவும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை காலை 10.30 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் திருவல்லிக்கேணி போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது.
இந்த நிபந்தனைப்படி, செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன் சரணடைந்து, பிணை செலுத்தினார். பிணையை ஏற்று கொண்ட நீதிபதி, நாளை காலை 10.30 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் திருவல்லிக்கேணி போலீஸ் முன் ஆஜராக உத்தரவிட்டார்.
அவரது சகோதரர் அசோக்குமார், வேறொரு வழக்கு தொடர்பாக கரூரில் ஆஜராக உள்ளதால், அவர் திங்கள்கிழமை சென்னை முதன்மை நீதிமன்றத்தில் சரணடைந்து பிணை செலுத்துவார் எனக் கூறப்படுகிறது.
Summary
Senthil Balaji appears in court after a month in hiding!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





