ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மத்திய அரசுடன் சோனம் வாங்சுக் ரகசிய ஒப்பந்தம்! காங்கிரஸ் எம்பி விமர்சனம்

சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தை காங்கிரஸ் எம்பி விமர்சித்திருப்பது பற்றி...

sonam wangchuk

சோனம் வாங்சுக் - ANI

Published On :24 ஜூலை 2026, 12:12 pm IST

மத்திய அரசுடன் சோனம் வாங்சுக் ரகசிய ஒப்பந்தம் செய்திருப்பதாக காங்கிரஸ் எம்பி இம்ரான் மசூத் விமர்சித்துள்ளார்.

தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருக்கு ஆதரவாக, நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார்.

தொடர்ந்து 26 நாள்களாக மருத்துவமனையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் அவரை, மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோா் நேற்றிரவு நேரில் சந்தித்தனர். அப்போது சிஜேபி கோரிக்கைகளை பரிசீலிப்பதாக எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, உண்ணாவிரதத்தை சோனம் வாங்சுக் கைவிட்டார்.

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு காங்கிரஸ் எம்பி இம்ரான் மசூத் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

”சோனம் வாங்சுக், அண்ணா ஹசாரேவின் இரண்டாம் பாகம். கடந்த 12 ஆண்டுகளாக அண்ணா ஹசாரே எப்படி அமைதியாக இருக்கிறாரோ, அதுபோன்று இனி சோனம் வாங்சுக்கும் அமைதி காப்பார்.

நேற்று மத்திய அரசுடன் அவர் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டார். அந்த நேரத்தில் மாணவர்கள் யாரேனும் உடனிருந்தார்களா? ஆகையால், அரசுடன் தனிப்பட்ட ஆதாயத்துக்காக செய்யப்பட்ட ஒப்பந்தம் இல்லாமல் வேறென்ன?” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிரதமர் இல்லத்துக்கு வெளியே எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நேர்மை இல்லை என்று சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி விமர்சித்திருந்தார்.

Summary

Sonam Wangchuk's secret pact with the Central Government! Congress MP criticizes.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.