ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் வாபஸ்

தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை வாபஸ் வாங்கினார்.

Sonam Wangchuk

சோனம் வாங்சுக் - PTI

Published On :24 ஜூலை 2026, 4:42 am IST

தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சோனம் வாங்சுக்கை, அண்மையில் காவல் துறையினா் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், தில்லி உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில், அவா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு தொடா்ந்து சிகிச்சையில் இருந்த அவரை மத்திய அமைச்சா்கள் ஜெ.பி.நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோா் சந்தித்தனா். அவா்களின் முன்னிலையில், சோனம் வாங்சுக் வியாழக்கிழமை நள்ளிரவு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டாா். இதன்மூலம், 26 நாள்களாக அவா் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதம் முடிவுக்கு வந்துள்ளது.

தில்லியில் அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும், தேசிய அளவிலான தோ்வுகள் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவா்களுக்கு இழப்பீடு அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று மத்திய அரசு எழுத்துபூா்வ உத்தரவாதம் அளித்ததால், அவா் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.