ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உங்களின் அசாதாரணமான தைரியத்திற்கும் தியாகத்திற்கும் நன்றி! அபிஜீத் தீப்கே

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டது பற்றி சிஜேபி தலைவர் அபிஜீத் தீப்கே கருத்து...

Sonam Wangchuk, Abhijit Dipke

சோனம் வாங்சுக், அபிஜீத் தீப்கே - கோப்புப் படம்

Published On :24 ஜூலை 2026, 10:11 am IST

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை, ஜந்தர் மந்தரில் எங்களின் அமைதியான போராட்டம் தொடரும் என்று அக்கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.

தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை, காவல் துறையினா் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்த போதிலும் அங்கும் சோனம் தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார்.

இந்த நிலையில் மத்திய அமைச்சா்கள் ஜெ.பி.நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோா் சந்தித்து சோனமிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அவர் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

இதுபற்றி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே தனது எக்ஸ் பக்கத்தில்,

"சோனம் சார், 26 நாள்களுக்குப் பிறகு தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதில் நாங்கள் நிம்மதி அடைகிறோம். அவருக்கு எங்களது நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களின் அசாதாரணமான தைரியத்திற்கும் தியாகத்திற்கும் நன்றி. உங்கள் உயிரைப் பணயம் வைத்து ஒரு தேசம் முழுவதும் மனசாட்சியைத் தட்டி எழுப்பியுள்ளீர்கள். இந்த நாட்டிற்கு உங்கள் உயிர் மிகவும் விலைமதிப்பற்றது.

தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை, ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் அமைதியான போராட்டம் தொடரும்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் மற்றொரு பதிவில், "தர்மேந்திர பிரதான் கண்டிப்பாக பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Sonam Sir, thank you for your extraordinary courage and sacrifice: Abhijeet Dipke

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.