ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மாற்றம் சாத்தியமே! அபிஜீத் தீப்கேவின் கிராம அரசுப் பள்ளிக்கு வந்த முதல் கணினி!

அபிஜீத் தீப்கேவின் சொந்த கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கு முதல்முறை கணினி வசதி செய்து தரப்பட்டுள்ளது குறித்து...

Change is possible Govt school at Abhijeet Dipke's native village gets its first-ever computer

கணினி பார்த்து மகிழ்ச்சி அடைந்த குழந்தைகளுடன் உரையாடும் அபிஜீத் தீப்கே - இன்ஸ்டாகிராம்

Published On :18 ஆகஸ்ட் 2026, 7:16 pm IST

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கேவின் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதல்முறையாக கணினி வாங்கப்பட்டுள்ளது.

பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பை உறுதி செய்வதற்காக அபிஜீத் தீப்கே அழைப்பு விடுத்திருந்த பிரசாரம் சுதந்திர நாளான ஆகஸ்ட் 15 முதல் தொடங்கிய நிலையில், தனது கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கு கணினி வசதி செய்து தரப்பட்டுள்ளது.

நாட்டில் அனைத்து கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பை உறுதி செய்வதற்காகவும் அதனை மேம்படுத்துவதற்காகவும் பள்ளிகளை சரி செய் என்ற பிரசாரத்தை கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தொடங்கியுள்ளார்.

இந்த பிரசாரத்தில் மாணவர்கள், பெற்றோர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் எனப் பலரும் இணைய வேண்டு என கேட்டுக்கொண்ட நிலையில், சுதந்திர தினத்தில் இருந்து பிரசாரம் தொடங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக மகாராஷ்டிரத்தில் உள்ள ஹிங்கோலி பஞ்சாயத்திற்குட்பட்ட தனது சொந்த கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கு உள்ளூர் மக்களின் உதவியுடன் கணிணி வசதியை அபிஜீத் தீப்கே உறுதிப்படுத்தியுள்ளார்.

அப்பள்ளிக்கு முதல்முறை கணினி கொண்டுவரப்பட்டுள்ளதால், மாணவர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளதாகவும், மாற்றம் சாத்தியமே எனவும் அபிஜீத் தீப்கே பகிர்ந்துள்ளார்.

கணினியை வியப்புடன் கண்டு உற்சாகமடைந்த பள்ளி மாணவர்களுடனான உரையாடலைப் பகிர்ந்த அபிஜீத், அரசு தோல்வி அடைந்துள்ளதாகவும், மக்கள் மாற்றத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.

அபிஜீத் தீப்கேவின் பிரசாரத்தைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் தங்கள் பள்ளிக்கு அடிப்படை வசதி இல்லை என்பதை வெளிப்படையாகக் கூறி விடியோ பதிவிட்டு வருகின்றனர்.

பள்ளிக்குச் செல்ல முறையான சாலை வசதி இல்லை, பேருந்து வசதி இல்லை என மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேச கிராமப்புற மாணவர்கள் பலர் விடியோக்கள் பதிவிட்டு வருகின்றனர். ஒருசில விடியோக்களுக்கு அரசு பதில் அளித்து மாணவர்களின் கோரிக்கையையும் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Change is possible Govt school at Abhijeet Dipke's native village gets its first-ever computer

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.