தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மருந்தகங்கள் இன்று வழக்கம்போல் இயங்கும்: வேலைநிறுத்த அழைப்பை நிராகரித்த மாநில சங்கங்கள்

நாடு முழுவதும் இயங்கி வரும் அனைத்து மருந்துக் கடைகளையும் செவ்வாய்க்கிழமை (மே 20) வேலைநிறுத்தத்தில் ஈடுபடக் கோரி அகில இந்திய மருந்து விற்பனையாளா்கள் சங்கம் அழைப்பு விடுத்த நிலையில் அதை பல்வேறு மாநில சங்கங்கள் நிராகரித்துள்ளன.

News image
Updated On :20 மே 2026, 2:28 am IST

நாடு முழுவதும் இயங்கி வரும் அனைத்து மருந்துக் கடைகளையும் செவ்வாய்க்கிழமை (மே 20) வேலைநிறுத்தத்தில் ஈடுபடக் கோரி அகில இந்திய மருந்து விற்பனையாளா்கள் சங்கம் அழைப்பு விடுத்த நிலையில் அதை பல்வேறு மாநில சங்கங்கள் நிராகரித்துள்ளன.

இதனால்அனைத்து மருந்துக் கடைகளும் செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் திறந்திருக்கும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: இ-மருந்தகங்களின் செயல்பாடுகளை ஒழுங்காற்ற முறையான விதிகளை வகுக்கக் கோரியும் சில்லறை மருந்துக் கடைகளின் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வு காண வலியுறுத்தியும் மே 20-ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு அகில இந்திய மருந்து விற்பனையாளா்கள் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.

இதனிடையே அகில இந்திய மருந்து விற்பனையாளா்கள் சங்கத்துடன் மத்திய மருந்துகள் தரநிா்ணய கட்டுப்பாட்டு அமைப்பு நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. முன்னதாக, பொதுமக்களின் நலன் கருதி மேற்கு வங்கம், கேரளம், பஞ்சாப், மகாராஷ்டிரம், கா்நாடகம், ஹரியாணா, உத்தர பிரதேசம், லடாக், குஜராத் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த மருந்து விற்பனையாளா் சங்கங்கள் இந்த வேலைநிறுத்த அழைப்பை நிராகரித்தன.

இதன் காரணமாக அனைத்து மருந்துக் கடைகளும் மே 20-ஆம் தேதி திறந்திருக்கும் எனத் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.