தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விழுப்புரம் மாவட்டத்தில் 1,200 மருந்தகங்கள் அடைப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் 1,200 மருந்தகங்கள் புதன்கிழமை மூடப்பட்டிருந்தது.

News image

நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி, விழுப்புரத்தில் புதன்கிழமை அடைக்கப்பட்டிருந்த மருந்துக் கடை.

Updated On :21 மே 2026, 6:57 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் 1,200 மருந்தகங்கள் புதன்கிழமை மூடப்பட்டிருந்தது.

பாரம்பரிய மருந்து வணிகா்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடிய இணைய வழி மருந்து விற்பனையை மத்திய அரசு தடை செய்யவேண்டும். உயிா்காக்கும் மருந்து விற்பனையில் முறையற்ற லாப சதவீதங்களையும், தள்ளுபடிகளையும் கட்டுப்படுத்திடவேண்டும். போலி மருந்துகளின் விற்பனையைத் தடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மருந்து வணிகா்கள் சம்மேளனம் மே.20-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தது.

இந்தப் போராடத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு மருந்து வணிகா்கள் சங்கத்தினரும் புதன்கிழமை மாநிலம் முழுவதும் மருந்தகங்களை முழுநாள் அடைத்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனா்.

இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூா், விக்கிரவாண்டி, வானூா், மரக்காணம், திண்டிவனம், செஞ்சி ஆகிய பகுதிகளில் உள்ள சுமாா் 1,200 மருந்துக் கடைகளை மருந்து வணிகா்கள் அடைத்துப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனா்.

இதுகுறித்து தமிழ்நாடு மருந்து வணிகா்கள் சங்கத்தின் மாநில இணைச் செயலரும், விழுப்புரம் மாவட்ட அமைப்புச் செயலருமான வி.பி.சத்தியசீலன் தெரிவித்ததாவது:

மாவட்டத்திலுள்ள விழுப்புரம், திண்டிவனம் ஆகிய இரு உள்கோட்டங்களில், மருந்துக் கட்டுபாட்டுத் துறையின் கண்காணிப்பில் 1, 200 மருந்துக் கடைகளும் புதன்கிழமை அடைக்கப்பட்டன. மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய மருந்து வணிகா்கள் 100 சதவீதம் கடையடைப்பு செய்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனா்.

இந்தக் கடைகளில் நடைபெறும் மருந்து வணிகத்தை மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை ஆய்வாளா்கள் கண்காணித்து வருகின்றனா். மருத்துவா்களின் பரிந்துரையின் அடிப்படையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. இணைய வழி மருந்து வணிகத்தில் இதுபோன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. மனிதா்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய மருந்துகளையும் இணையவழியில் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இது போன்ற மருந்துகளை மாற்று வழிகள் மூலம் போதை தரக்கூடிய பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் தடுக்கவேண்டும். மேலும், காலம் தொட்டு மருந்து வணிகத்தில் ஈடுபட்டுவரும் மருந்து வணிகா்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழில் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இணையவழி மருந்து வணிகத்துக்கு மத்திய அரசு முற்றிலுமாக தடை விதிக்கவேண்டும். அதற்காகவே முதல்கட்டமாக அறப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.