வேலை வேண்டுமா..? மத்திய அரசில் 1330 துணை ஆய்வாளர் வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு
மத்திய அரசின் காவல்துறையில் காலியாக உள்ள 1330 துணை ஆய்வாளர், உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது.


மத்திய அரசின் காவல்துறையில் காலியாக உள்ள 1330 துணை ஆய்வாளர், உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறமையுள்ள இருபாலர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 1330
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Sub-Inspector (Male) in Delhi Police - 97 Open - 86, Ex-Ser - 11)
பணி: Sub-Inspector in Delhi Police/ Female - 53 (Open - 53)
சம்பளம்: மாதம் ரூ.35400 - 112400
பணி: Sub-Inspector (GD) in CAPFs - 1180 (Open - 1073), (Ex-Ser - 107)
சம்பளம்: மாதம் ரூ.29200 - 92300
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆண் விண்ணப்பதாரர்கள் இலகுரக வாகன (இரு சக்கர வாகனம் மற்றும் கார்) ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.08.2018 தேதியின்படி 20 முதல் 25க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு தாள்கள் கொண்ட எழுத்துத் தேர்வு, உடற் தகுதித் தேர்வு (PST,PET) மற்றும் மருத்துவ தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. எஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினர், பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு விளக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: http://ssc.nic.in என்ற இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.04.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ssc.nic.in/SSC_WEBSITE_LATEST/notice/notice_pdf/noticesicpo2018_03032018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...