மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

கடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் பற்றி...

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 6:19 am

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பினால் பங்குச்சந்தைகள் இன்று(பிப். 24) கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 83,052.54 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 699.09 புள்ளிகள் குறைந்து 82,595.57 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அதிகபட்சமாக 850 புள்ளிகள் வரை குறைந்தது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 191.75 புள்ளிகள் குறைந்து 25,521.25 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

சென்செக்ஸின் 30 பங்குகளில் -இன்ஃபோசிஸ், பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் கடும் இழப்பைச் சந்தித்துள்ளன. எடர்னல், எச்சிஎல், டெக்னாலஜிஸ், டிசிஎஸ், டெக் மஹிந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், டிரென்ட், ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்களும் சரிவைச் சந்தித்து வருகின்றன.

மாறாக, எஸ்பிஐ, பவர் கிரிட் கார்ப்பரேஷன், டாடா ஸ்டீல் ஆகியவை ஓரளவு லாபத்துடன் வர்த்தகமாகின்றன.

பிஎஸ்இ மிட்கேப் 150 குறியீடு 0.8 சதவீதமும் ஸ்மால்கேப் 250 குறியீடு 1 சதவீதமும் சரிந்தது.

நிஃப்டி வங்கி, உலோகம் , பார்மா, பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் குறியீடு லாபமடைந்து வருகின்றன. மற்ற துறைகள் அனைத்தும் சரிவுடன் வர்த்தமாகின்றன.

summary

Stock Market: Sensex down 850 pts; Nifty 25,500

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.