விஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...

News image
பங்குச்சந்தை
Updated On :23 பிப்ரவரி 2026, 6:36 am

இணையதளச் செய்திப் பிரிவு

வாரத்தின் முதல் நாளான இன்று(பிப். 23, திங்கள்கிழமை) பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 82,906.83 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 344.74 புள்ளிகள் அதிகரித்து 83,159.45 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 81.70 புள்ளிகள் உயர்ந்து 25,652.95 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

சென்செக்ஸ் மிட்கேப் 150 குறியீடு 0.5 சதவீதம் சரிந்தது, அதே நேரத்தில் ஸ்மால்கேப் 250 குறியீடு 0.29 சதவீதம் உயர்ந்தது.

துறைசார் குறியீடுகளில், நிஃப்டி பொதுத்துறை வங்கி 1.6 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்தது, தொடர்ந்து ஆட்டோ, வங்கி, நிதி சேவைகள், மருந்து, ரியல் எஸ்டேட் ஆகியவை உயர்ந்தன. மாறாக, ஐடி 1.5 சதவீதமும், கெமிக்கல் 1.8 சதவீதமும் சரிந்தது.

சென்செக்ஸ் 30ல் அதானி போர்ட்ஸ் 3 சதவீதம் உயர்ந்தது. ஆக்சிஸ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, ஹெச்டிவங்கி, மஹிந்திரா & மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ ஆகியவை தலா 1 - 2 சதவீதம் உயர்ந்தன. மறுபுறம், இன்போசிஸ் உள்ளிட்ட ஐடி நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

summary

Stock Market: Sensex gains 350 pts; Nifty eyes 25,700 mark

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.