/

எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!

உலகளவில் இந்தியாவை ராகுல் காந்தி குறைமதிப்புக்கு உட்படுத்துவதாக பாஜக எம்.பி. அனுராக் தாகூர் குற்றச்சாட்டு

News image
ராகுல் காந்தி - கோப்புப் படம்
Updated On :24 பிப்ரவரி 2026, 7:19 am

இணையதளச் செய்திப் பிரிவு

உலகளவில் இந்தியாவை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குறைமதிப்புக்கு உட்படுத்துவதாக பாஜக எம்.பி. அனுராக் தாக்குர் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுதில்லியில் நடைபெற்ற உலகளாவிய ஏஐ உச்சி மாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டையின்றி போராட்டம் நடத்தியதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுடன் பாஜக எம்.பி. அனுராக் தாக்குர் பேசுகையில், ராகுல் காந்தி தேச விரோத சக்திகளின் செய்தித் தொடர்பாளராக மாறிவிட்டார். அவர் இந்தியாவுக்கு எதிரான ஒரு நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றுகிறார்.

பொய் சொல்வது, குழப்பத்தை ஏற்படுத்துவது, இந்தியாவை அவதூறு செய்வது, பிரதமர் மோடியை தாக்கிப் பேசுவது, தேச விரோத அரசியலில் ஈடுபடுவது உலகளவில் நாட்டின் முன்னேற்றத்தை குறைமதிப்புக்கு உள்ளாக்குவது மட்டுமே அவரின் ஒரே வேலை.

சர்வதேச அளவிலான ஏஐ உச்சி மாநாட்டில், வெட்கமற்ற மற்றும் சட்டையின்றி நிர்வாண நாடகங்களை அவர் நிகழ்த்துகிறார். இதன் மூலம் அநாகரிகமான நடத்தைகளைத்தான் ராகுல் வெளிப்படுத்துகிறார்.

ராகுல் காந்தியின் அரசியல் வெளிநாடுகளால் வடிவமைக்கப்படுகிறதா? காங்கிரஸ் கட்சி, வெளிநாட்டினரின் நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றுகிறதா? காங்கிரஸ் கட்சி, இந்தியாவின் போட்டி நாடுகளை ஆதரிக்கிறதா?

ராகுல் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவரா அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.