தேசிய டெக்ஸ்டைல் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை
நேஷனல் டெக்ஸ்டைல் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாண்மை டிரெய்னி (டெக்ஸ்டைல், நிதியியல்) பணியிடங்களுக்கான


நேஷனல் டெக்ஸ்டைல் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாண்மை டிரெய்னி (டெக்ஸ்டைல், நிதியியல்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Management Trainee (Textile)
தகுதி: பொறியியல் துறையில் டெக்ஸ்டைல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.12,600 - 32,500
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: Management Trainee (Finance)
தகுதி: சிஏ, சிஎம்ஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.12,600 - 32,500
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: டெக்ஸ்டைல் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் கேட் தேர்வு-2017 அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். நிதிப் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பட்டப்படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை National Textile Corporation Ltd என்ற பெயருக்கு புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: National Textile Corporation Ltd, Post Bag No: 7 (Seven), Lodhi Road Head Post Office, New Delhi, Pin – 110003
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ntcltd.org/Writereaddata/Downloads/Detailed%20Advertisement.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...