கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி..!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் தொகுதி செயல் அலுவலர் நிலை 3 மற்றும் செயல் அலுவலர், நிலை 4 ஆகிய பதவிகளுக்கான 2014 & 2015, 2015 & 16

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:59 pm

ஆர். வெங்கடேசன்

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் தொகுதி செயல் அலுவலர் நிலை 3 மற்றும் செயல் அலுவலர், நிலை 4 ஆகிய பதவிகளுக்கான 2014 & 2015, 2015 & 16 மற்றும் 2016 & 17-ஆம் ஆண்டுகளுக்குரிய விளம்பர அறிக்கைகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இப்பதவிகளுக்கு இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவராவர். செயல் அலுவலர், நிலை 3-இல் 29 பேரும், செயல் அலுவலர், நிலை 4-இல் 49 பணியிடங்களும் பூர்த்தி செய்யப்பட உள்ளன. செயல் அலுவலர், நிலை 3க்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சியும், செயல் அலுவலர், நிலை 4க்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி இரு பதவிகளுக்கும் விண்ணப்பிக்க இன்று சனிக்கிழமை 24.12.2016 கடைசி நாள் ஆகும்.

செயல் அலுவலர், நிலை 3க்கான எழுத்து தேர்வு இரு தாள்களைக் கொண்டது. இவை 29.04.2017 அன்று காலை மற்றும் பிற்பகலில் நடைபெறுகிறது. செயல் அலுவலர், நிலை 4க்கான இரு தாள்களைக் கொண்டது. இவை 30.4.2017 அன்று காலை மற்றும் பிற்பகலில் நடைபெறுகிறது.

இதற்கான தேர்வு மையங்கள் தமிழ்நாடு முழுவதும் 32 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பணியிடங்களுக்கு தேர்வு கட்டணமாக 100 +50 = 150 ரூபாய் செலுத்த வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், முன்னாள் ராணுவத்தினர் ஆகிய பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்ட மூன்று, இரண்டு முறை தேர்வுக் கட்டணச் சலுகையை ஏற்கெனவே பயன்படுத்தியிருந்தால் அவர்கள் கண்டிப்பாக தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2016_22_not_eng_eo_gr_iv_viii_services1.pdf  என்ற இணையதள அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.