லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஐபிஎல் 2026 சீசனுக்காக புதிய இலச்சினையை வெளியிட்டுள்ளது.
இந்தச் சின்னங்கள் எங்கள் நகரத்தின், மாநிலத்தின் உள்ளுணர்வை பிரதிபலிக்கும் என அதன் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கூறியுள்ளார்.
இது குறித்து சஞ்சீவ் கோயங்கா கூறியதாவது:
இன்று, லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் புதிய இலச்சினையை வெளியிட்டுள்ளது. புதிய வடிவமைப்பு மட்டுமல்ல, புதிய தோற்றம்.
இந்தச் சின்னங்கள் எங்கள் நகரத்தின் மாநிலத்தின் உள்ளுணர்வை பிரதிபலிக்கும். தொடக்கத்தில் இருந்து ஒவ்வொரு ரசிகர்களும் இந்த அணிக்கு ஆதரவு அளித்துள்ளார்கள்.
இந்தப் புதிய இலச்சினை கருடன், கிரீடம், யானை என்ற மூன்று வலுவான சின்னங்களை ஒன்றிணைத்து, அது லக்னௌ, உத்தரப் பிரதேசத்தை தனிப்பட்ட உணர்வில் கதையாகக் கூறுகிறது.
இந்தப் புதிய இலச்சினை எங்களுக்கு மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருக்கிறது. லக்னௌ, உத்தரப் பிரதேச மக்கள் இந்த அணியை முதல் நாளில் இருந்து வரவேற்றுள்ளார்கள்.
இந்தச் சின்னம் அன்பு, நம்பிக்கையின் நினைவாக உருவாக்கப்பட்டுள்ளது.
கருடன் என்பது எங்களது கனவை உயர்த்துவதைப் பிரதிபலிக்கிறது.
கிரீடம் என்பது களத்தில் ஒவ்வொரு முறையும் நாங்கள் பெருமையுடன் களமிறங்குவதைப் பிரதிபலிக்கிறது.
யானை என்பது இந்தப் பகுதியின் வலிமை, விசுவாசத்தைப் பிரதிபலிக்கிறது.
இது அடையாளத்தை மாற்றுவதல்ல; இது எங்களது சத்தியம். இந்த நகரத்தை நாங்கள் பெருமைப்படுத்துவோம், எங்களது மண்ணை மதித்து, இதயத்துடன் வேலைச் செய்கிறோம் என்றார்.
Summary
What did Sanjiv Goenka say about the LSG new logo?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆயுஷ் பதோனியை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கியது ஏன்? ரிஷப் பந்த் விளக்கம்!

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

லக்னௌ அணிக்கு எதிராக கேமரூன் கிரீன் பந்துவீசுவார்!

எல்எஸ்ஜி அணியின் புதிய இலச்சினை..! மான்செஸ்டர் ஒரிஜினல் காரணமா?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


