மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

லக்னௌ அணிக்கு எதிராக கேமரூன் கிரீன் பந்துவீசுவார்!

கேகேஆர் அணியின் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் குறித்து...

News image

கேமரூன் கிரீன். - படம்: எக்ஸ் / கேகேஆர்.

Updated On :8 ஏப்ரல் 2026, 1:03 pm

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணியின் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் பந்துவீசுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கேகேஆர் அணியும் அவர் பந்துவீசும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் கேமரூன் கிரீன் ரூ.25.20 கோடிக்கு ஏலத்தில் கேகேஆர் அணியினால் எடுக்கப்பட்டார். இவ்வளவு விலைக் கொடுத்தும் அவர் இந்த சீசனில் பந்துவீசாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கிரீன் பந்துவீசாதது குறித்து கேப்டன் ரஹானேவும் தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். கிரிக்கெட் ஆஸ்திரேலியா அதற்கு காயத்தினால் கூடுதல் காலம் அவகாசம் தேவைப்படுகிறதெனவும் விளக்கமும் அளித்திருந்தது.

ஆங்கில இணையதளம் ஒன்றில் கிரீன் பந்துவீச தயாராக இருக்கிறார் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. ஹர்ஷித் ராணா, ஆகாஷ் தீப் காயம் காரணமாக விலகினார்கள். வருண், சுனில் நரைன் மோசமான ஃபார்மில் இருக்கிறார்கள். இதனால், கிரீன் பந்துவீசுவது முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

பேட்டிங்கில் கடந்த மூன்று போட்டிகளில் கிரீன் 18, 2, 4 என மோசமான ரன்களை எடுத்துள்ளார். பந்துவீச்சில் ஆவது நல்ல முன்னேற்றத்தை வழங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. டி20 உலகக் கோப்பையிலும் கிரீன் சொதப்பியது குறிப்பிடத்தக்கது.

Summary

Green expected to begin bowling in KKR's game against LSG on Thursday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.