நடப்பு ஐபிஎல் தொடரில் கேமரூன் கிரீன் ரன்கள் குவிக்கத் தடுமாறுவது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேசியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு போட்டியில்கூட வெற்றி பெறவில்லை. நான்கு போட்டிகளில் தோல்வி மற்றும் ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. புள்ளிப்பட்டியலிலும் அந்த அணி கடைசி இடத்தில் உள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கேமரூன் கிரீன் ரூ. 25.20 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆனால், நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் மிகவும் தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். முதலில் சில போட்டிகளில் பந்துவீசாத அவர், அதன் பின் பந்துவீச்சில் ஈடுபட்டார். பந்துவீச்சிலும் அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதுவரை விளையாடி 5 போட்டிகளிலும் 18(10), 2(2), 4(2), 32 (24) மற்றும் 0(1) ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில், ஐபிஎல் ஏலத்தில் வீரர்கள் அதிக தொகைக்கு வாங்கப்பட்டுள்ளதால் மட்டுமே அவர்களை அணியில் சேர்க்கக் கூடாது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபின்ச் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் கேமரூன் கிரீன், இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதாக இருந்தது. ஆனால், அவர் நூர் அமகதின் பந்துவீச்சில் கோல்டன் டக் ஆனார். சேஸிங்கின்போது, சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவது சவாலாக இருக்கும்.
கேமரூன் கிரீனுக்கு ஏலத்தில் அதிக தொகை செலவிட்டு எடுத்துள்ளோம் என்பதற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவரை விளையாடவைப்பதாக நினைக்கவில்லை. அப்படி செய்தால் அது அணியின் அறியாமையாக இருக்கும். வீரர்கள் அவர்களது திறமையை அடிப்படையாக வைத்து ஏலத்தில் வாங்கப்படுகிறார்கள். இந்த வீரருக்கு அதிக தொகை செலவிட்டுள்ளோம் அதனால் இவர் விளையாடியாக வேண்டும் என்று அர்த்தமில்லை. கேமரூன் கிரீன் அவர் வழக்கமாக விளையாடும் இடத்தில் விளையாடாமல் வேறு இடத்தில் விளையாடுகிறார். அவர் டாப் ஆர்டரில் விளையாடும்போது நன்றாக ரன்கள் குவித்துள்ளார் என்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் கேமரூன் கிரீன் 6-வது வீரராக களமிறங்கி நூர் அகமது பந்துவீச்சில் கோல்டன் டக் ஆனது குறிப்பிடத்தக்கது.
Summary
The former captain of the Australian team has spoken about Cameron Green's struggles to score runs in the ongoing IPL season.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லக்னௌ அணிக்கு எதிராக கேமரூன் கிரீன் பந்துவீசுவார்!

கேமரூன் கிரீன் பந்துவீசவில்லையென்றால் கேகேஆர் என்ன செய்ய வேண்டும்?

ஐபிஎல் தொடரில் கேமரூன் கிரீன் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது: ஆஸி. பயிற்சியாளர்

கேமரூன் கிரீன் பந்துவீசாதது ஏன்? கிரிக்கெட் ஆஸ்திரேலியா விளக்கம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



