திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஐபிஎல் கடைசி லீக் போட்டி: கே.எல்.ராகுல் அரைசதம்; ஆறுதல் வெற்றி யாருக்கு?

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரானப் போட்டியில் முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் எடுத்துள்ளது.

News image

அரைசதம் விளாசிய மகிழ்ச்சியில் கே.எல்.ராகுல் - படம் | ஐபிஎல் (எக்ஸ்)

Updated On :24 மே 2026, 9:40 pm IST

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரானப் போட்டியில் முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் இன்று நடைபெற்று வரும் கடைசி லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தில்லி கேபிடல்ஸ் முதலில் விளையாடியது.

கே.எல்.ராகுல் அரைசதம்; ஆறுதல் வெற்றி யாருக்கு?

முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் எடுத்துள்ளது.

தில்லி கேபிடல்ஸ் அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் அரைசதம் கடந்து அசத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் அதிகபட்சமாக 30 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் அக்‌ஷர் படேல் 39 ரன்களும், டேவிட் மில்லர் 28 ரன்களும் எடுத்தனர். சஹில் பரேக் 24 ரன்கள், அபிஷேக் போரெல் 22 ரன்கள் எடுத்தனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய் சௌரப் துபே 4 ஓவர்களில் 28 ரன்களை விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அனுகுல் ராய், சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்குகிறது.

தில்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்ட நிலையில், ஆறுதல் வெற்றியுடன் இந்த ஐபிஎல் தொடரை நிறைவும் செய்யும் முனைப்பில் இரண்டு அணிகளும் விளையாடுகின்றன.

Summary

In the IPL match against the Kolkata Knight Riders, the Delhi Capitals, batting first, scored 203 runs for the loss of 5 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.