ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரானப் போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்று வரும் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட் செய்தது.
ஃபின் ஆலன், அங்க்ரிஷ் ரகுவன்ஷி அதிரடி!
முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் அஜிங்க்யா ரஹானே மற்றும் ஃபின் ஆலன் களமிறங்கினர். கேப்டன் ரஹானே 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, ஃபின் ஆலன் மற்றும் அங்க்ரிஷ் ரகுவன்ஷி ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியாக விளையாடி சிக்ஸர் மழையைப் பொழிந்தது. அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். ஃபின் ஆலன் 35 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து 7 ரன்களில் சதம் விளாசும் வாய்ப்பை தவறவிட்டார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் அடங்கும்.
ஃபின் ஆலன் ஆட்டமிழந்த பிறகு அங்க்ரிஷ் ரகுவன்ஷியுடன் கேமரூன் கிரீன் ஜோடி சேர்ந்தார். களமிறங்கியது முதலே அதிரடியாக விளையாடிய கேமரூன் கிரீனும் அரைசதம் விளாசி அசத்தினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அங்க்ரிஷ் ரகுவன்ஷி 44 பந்துகளில் 82 ரன்கள் (4 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்) எடுத்தும், கேமரூன் கிரீன் 28 பந்துகளில் 52 ரன்கள் (3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) எடுத்தும் கடைசி வரை களத்தில் இருந்தனர்.
குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் முகமது சிராஜ் மற்றும் சாய் கிஷோர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடி வருகிறது.
Summary
In the IPL match against the Gujarat Titans, the Kolkata Knight Riders, batting first, scored 247 runs for the loss of two wickets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐபிஎல் கடைசி லீக் போட்டி: கே.எல்.ராகுல் அரைசதம்; ஆறுதல் வெற்றி யாருக்கு?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சு; பிளே ஆஃப் செல்வதற்கு வாய்ப்பிருக்கிறதா?

குஜராத் டைட்டன்ஸின் தோல்விக்கு காரணம் இதுதான்; பயிற்சியாளர் கூறியதென்ன?

5 விக்கெட்டுகள் வீழ்த்தி மோஷின் கான் அபாரம்; லக்னௌவுக்கு 156 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK




