ஐபிஎல் தொடரில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 155 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் விளையாடியது.
ரிங்கு சிங் அரைசதம் விளாசல்; லக்னௌவுக்கு 156 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேப்டன் அஜிங்க்யா ரஹானே 10 ரன்கள், டிம் செய்ஃபெர்ட் 0 ரன், அங்க்ரிஷ் ரகுவன்ஷி 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ரோவ்மன் பௌவல் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 31 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
அதன் பின், கேமரூன் கிரீன் மற்றும் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறிது நேரம் தாக்குப் பிடித்தது. இருப்பினும், கேமரூன் கிரீன் 21 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 சிக்ஸர்கள் அடங்கும். ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடிய ரிங்கு சிங் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 51 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும்.
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மோஷின் கான் 4 ஓவர்களில் வெறும் 23 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜார்ஜ் லிண்டே ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடி வருகிறது.
Summary
Batting first in the IPL match against the Lucknow Super Giants, the Kolkata Knight Riders have scored 155 runs.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக லக்னௌ பந்துவீச்சு!

வருண் சக்ரவர்த்தி, கார்த்திக் தியாகி அபாரம்; கொல்கத்தாவுக்கு 156 ரன்கள் இலக்கு!

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு 193 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

லக்னௌவுக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை



