பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! அவரால் பலன் இல்லை! - பாஜக

ராகுல் காந்தி பகுதி நேர அரசியல்வாதி என நிதின் நவீன் விமர்சித்தது குறித்து...

News image

மேற்கு வங்கத்தில் சாலைவலம் மேற்கொண்ட நிதின் நவீன் - பிடிஐ

Updated On :26 ஏப்ரல் 2026, 12:55 pm

காங்கிரஸ் மக்களைவைத் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி பகுதி நேர அரசியல்வாதி என பாஜக தேசிய செயலர் நிதின் நவீன் இன்று (ஏப். 26) விமர்சித்தார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான முதல் கட்டத் தேர்தல் ஏப். 23 ஆம் தேதி முடிந்த நிலையில், ஏப். 29 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. பிரசாரத்திற்கு நாளை ஒரு நாள் மட்டுமே அவகாசம் உள்ளதால், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

அந்தவகையில் மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்திற்குட்பட்ட சாந்திபூர் பகுதியில் நிதின் நபின் சாலைவலம் மேற்கொண்டு பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

சாலைவலத்தின்போது செய்தியாளர்களுடன் நிதின் நவீன் பேசியதாவது:

''தேர்தல் வந்தால் மட்டும்தான் ராகுல் காந்தி பேசுவார். மற்ற நேரங்களில் மக்கள் பிரச்னைகள் குறித்து அவருக்கு கவலையில்லை. இத்தகைய பகுதி நேர அரசியல்வாதியால் மேற்கு வங்க மக்கள் அடையப்போகும் பலன் ஏதுமில்லை.

பொறுத்திருந்து பாருங்கள். சில நாள்களில் மமதா பானர்ஜியுடன் ராகுல் காந்தி அமர்ந்திருப்பார். அவர்களின் இந்தியா கூட்டணி முறிந்துவிட்டது. எங்களுக்கு அவர்களைப்போன்ற கூட்டணி ஏதும் இல்லை'' எனப் பேசினார்.

மேற்கு வங்கத்தில் நேற்று பிரசாரம் செய்த ராகுல் காந்தி, ''மமதா பானர்ஜியும் பிரதமர் நரேந்திர மோடியும் ஒரு நாணையத்தின் இரு பக்கங்களைப் போன்றவர்கள். அவர்களுக்கு அவர்களைப் பற்றி மட்டும் தான் கவலை. இந்தியாவுக்கு பிரதமர் மோடி என்ன செய்து வருகிறாரோ? அதனையே மேற்கு வங்க மாநிலத்திற்கு மமதா செய்து வருகிறார்'' என விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

BJP chief Nitin Nabin calls Rahul Gandhi part-time politician

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.