கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

என் மீது மட்டும் பல்வேறு வழக்குகள்; ஆனால், மமதா மீது இல்லை! ஏன்? பாஜகவுக்கு ராகுல் கேள்வி

மேற்கு வங்கத்தில் மக்களின் நலன்களுக்காக மாநில முதல்வர் மமதா பானர்ஜி எதுவும் செய்யவில்லை என ராகுல் காந்தி குற்றச்சாட்டு

News image

நரேந்திர மோடி | ராகுல் காந்தி | மமதா பானர்ஜி - சித்திரிப்பு

Updated On :25 ஏப்ரல் 2026, 1:36 pm

மேற்கு வங்கத்தில் மக்களின் நலன்களுக்காக மாநில முதல்வர் மமதா பானர்ஜி எதுவும் செய்யவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் காங்கிரஸின் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசியதாவது, "நரேந்திர மோடி அரசு, எனக்கு எதிராக பல வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. ஆனால், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி மீது இல்லை. ஏனெனில், அவர் நேரடியாக பாஜகவை எதிர்த்துப் போராடவில்லை.

தொடர்ந்து 5 நாள்களில் 55 மணிநேரம் அமலாக்க இயக்குநரகம் என்னிடம் விசாரணை மேற்கொண்டது. மமதா பானர்ஜி எத்தனை மணிநேரம் விசாரிக்கப்பட்டார்? அவருக்கு எதிராக அமலாக்கத் துறை அல்லது சிபிஐ விசாரணை எதுவுமில்லை. அவர் (மமதா) நேரடியாக பாஜகவை எதிர்த்துப் போராடாததால்தான்.

என் வீடு பறிக்கப்பட்டது. எனது மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. எனக்கு எதிராக 36 வழக்குகள் உள்ளன. நரேந்திர மோடியால், மமதா மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?

காங்கிரஸ் மட்டுமே பாஜகவை கருத்தியல் அடிப்படையில் எதிர்கொள்கிறது. என்னையும் கார்கே மற்றும் பிறரையும் மோடி 24 மணிநேரமும் தாக்குகிறார்.

ஆனால், தேர்தலின்போது மட்டுமே மமதாவை பிரதமர் தாக்குகிறார். தேர்தல் முடியட்டும்; மமதாவுக்கு எதிராக ஒரு வார்த்தைகூட மோடி பேச மாட்டார்.

பாஜக, ஆர்எஸ்எஸ்-ஸின் சித்தாந்தத்தை காங்கிரஸ் மட்டுமே தோற்கடிக்க முடியும்; திரிணமூல் காங்கிரஸ் அல்ல என்பது மோடிக்கு தெரியும்.

மேற்கு வங்கத்தில் வேலைவாய்ப்பைப் பெற திரிணமூல் காங்கிரஸில் யாரேனும் ஓர் உறவினராவது இருக்க வேண்டும். இல்லையெனில், அவருக்கு எதுவும் கிடைக்காது. தனது கட்சியினரின் நலனுக்காக மட்டுமே மமதா பானர்ஜி செயல்படுகிறார்.

மக்களின் நலனுக்காகவும் வருவாயை ஈட்டவும் மமதா எதுவும் செய்யவில்லை.

மேற்கு வங்கம், நாட்டின் தொழிற்துறை மையமாக இருந்தது. ஆனால், முதலில் இடது முன்னணியும் பின்னர் திரிணமூல் காங்கிரஸும் அவை எல்லாவற்றையும் அழித்து விட்டன.

5 லட்சம் வேலைவாய்ப்புகளை அளிப்பதாக 2021-ல் மமதா உறுதியளித்திருந்தார். ஆனால், யாருக்காவது வேலை கிடைத்ததா? மாநிலத்தில் வேலையின்மை கொடுப்பனவுக்காக 84 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

அவர், மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கான பாதையை வழிவகுக்கிறார். அவர் மக்களின் நலன்களுக்காக பணியாற்றியிருந்தால், பாஜகவால் மாநிலத்தில் ஊடுருவியிருக்க முடியாது" என்று தெரிவித்தார்.

Summary

Modi govt filed several cases against me, but not Mamata Banerjee: Rahul Gandhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.