திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற எங்களுக்கு இன்னும் வாய்ப்பிருக்கிறது: சிஎஸ்கே பயிற்சியாளர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இன்னும் இருப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

News image

கார்த்திக் சர்மா மற்றும் டெவால்ட் பிரேவிஸ் - படம் | சிஎஸ்கே (எக்ஸ்)

Updated On :16 மே 2026, 6:05 pm IST

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இன்னும் இருப்பதாக அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நேற்று (மே 15) நடைபெற்ற ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

லக்னௌவுக்கு எதிரான இந்த தோல்வியின் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு சென்னை சூப்பர் கிங்ஸுக்கு குறைந்துள்ளது. சிஎஸ்கே அடுத்து விளையாடக் கூடிய கடைசி இரண்டு லீக் போட்டிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

இந்த நிலையில், கடைசி இரண்டு லீக் போட்டிகளையும் இறுதிப்போட்டியாக நினைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாட வேண்டும் என அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நடப்பு ஐபிஎல் தொடர் உண்மையில் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஏனெனில், ஒவ்வொரு போட்டியும் இறுதிப்போட்டி போன்று இருக்கப் போகிறது. சென்னை சூப்பர் கிங்ஸும் அதே சூழலில்தான் இருக்கிறது. மீதமுள்ள இரண்டு லீக் போட்டிகளிலும் நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும். மேலும், மற்ற அணிகளின் முடிவுகளையும் நாங்கள் பார்க்க வேண்டியிருக்கிறது.

எங்களது கடைசி இரண்டு லீக் போட்டிகளிலும் நாங்கள் வெற்றி பெறப் போகிறோம். புள்ளிப்பட்டியலை நான் அதிகம் பார்க்கவில்லை. டாப் 4-ல் கடைசி இரண்டு இடங்களைப் பிடிக்க நிறைய அணிகளுக்குள் கடும் போட்டி நிலவுகிறது. வெற்றி பெற்றாக வேண்டும் என்ற அழுத்தம் சிஎஸ்கே மீது மட்டுமின்றி, அனைத்து அணிகளின் மீதும் இருக்கிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு சென்னை சூப்பர் கிங்ஸுக்கு இன்னும் இருக்கிறது என்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் இருக்கும் சிஎஸ்கே, கடைசி இரண்டு போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Summary

The coach of the Chennai Super Kings has stated that the team still has a chance to advance to the playoffs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.