ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி போராடி வரும் நிலையில், அந்த அணியின் ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா தாயகம் திரும்பியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. நான்காவது இடத்தைப் பிடிப்பதற்கான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் உள்ளன.
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அவர்களது கடைசி லீக் ஆட்டத்தில் தோற்கும் பட்சத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கான பிளே ஆஃப் வாய்ப்பு அதிகமாகும். அவர்கள் தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் நிலை ஏற்படும்.
இந்த நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி போராடி வரும் நிலையில், அந்த அணியின் ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா தாயகம் திரும்பியுள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி விளையாடவுள்ளதால், அதற்கான பயிற்சியில் ஈடுபடுவதற்காக ரச்சின் ரவீந்திரா தாயகம் திரும்புகிறார்.
இது தொடர்பாக ரச்சின் ரவீந்திரா தெரிவித்ததாவது: நடப்பு ஐபிஎல் தொடர் செல்லும் விதம் மற்றும் நான் கொல்கத்தா அணிக்காக அணியில் இடம்பெற்று விளையாடுவதில்லை என்பதை அணி நிர்வாகத்திடம் பேசினேன். தாயகம் திரும்பும் என்னுடைய முடிவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் புரிந்துகொண்டது வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்தார்.
நியூசிலாந்து - அயர்லாந்து இடையேயான டெஸ்ட் போட்டி வருகிற மே 27 ஆம் தேதி முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
Summary
While the Kolkata Knight Riders team is battling to advance to the playoffs in the IPL tournament, the team's all-rounder, Rachin Ravindra, has returned to his home country.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாததற்கான காரணம் இதுதான்: தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளர்

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!







