திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாததற்கான காரணம் இதுதான்: தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளர்

தில்லி கேபிடல்ஸ் அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாததற்கான காரணத்தை அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹேமங் பதானி கூறியுள்ளார்.

News image

தில்லி கேபிடல்ஸ் வீரர்கள் - படம் | AP

Updated On :25 மே 2026, 6:28 pm IST

தில்லி கேபிடல்ஸ் அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாததற்கான காரணத்தை அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹேமங் பதானி கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் நீடித்தபோதிலும், மற்ற அணிகளின் முடிவுகள் தில்லி கேபிடல்ஸுக்கு சாதகமாக அமையாததால் அந்த அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை. நடப்பு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் 7 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்துடன் நிறைவு செய்தது.

தில்லி கேபிடல்ஸ் அணி சில போட்டிகளில் வெற்றிக்கு மிக அருகில் சென்று தோல்வியைத் தழுவியது. குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரானப் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸ் தோல்வியடைந்தது. அதேபோல, பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 264 ரன்கள் எடுத்தும் தில்லி கேபிடல்ஸால் வெற்றி பெற முடியவில்லை. ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்படாததால் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு எதிராக தோல்வியடைந்தது.

இந்த நிலையில், தில்லி கேபிடல்ஸ் அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாததற்கான காரணத்தை அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹேமங் பதானி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: பல போட்டிகள் தில்லி கேபிடல்ஸ் அணிக்கு சாதகமாக அமைந்திருக்கலாம் அல்லது அமையாமலும் சென்றிருக்கலாம். ஆனால், வெற்றி பெறுவதற்கு வாய்ப்பிருந்தும் பல போட்டிகளில் அந்த வாய்ப்புகளை நாங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தோம்.

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 264 ரன்கள் எடுத்தும் தோல்வியடைந்தோம். சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் கேட்ச்சுகளை தவறவிட்டதால் தோல்வியடைந்தோம். முக்கியமான தருணங்களில் சிறப்பாக செயல்படாததால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை என்றார்.

Summary

Delhi Capitals Head Coach Hemang Badani has explained the reason why the team failed to advance to the playoffs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.