கேப்டன் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் வந்ததில்லை என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றுடன் லீக் ஆட்டங்கள் நிறைவடைந்தன. மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றதால், அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் வெளியேறின.
நடப்பு ஐபிஎல் தொடரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நன்றாக தொடங்கவில்லை. இருப்பினும், தொடரின் பிற்பகுதியில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நீடித்தது. இருப்பினும், மும்பைக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது கொல்கத்தாவின் பிளே ஆஃப் கனவை கலைத்தது.
இந்த நிலையில், கேப்டன் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் வந்ததில்லை என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கிரிக்கெட்டினை நல்ல விதமாக நான் எப்போதும் நேசித்து விளையாடுகிறேன். வீரர் ஒருவரின் குணம் எப்போதும் மிகவும் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பேன். உங்களுடைய அணி தடுமாறும்போது, உங்களுக்குள் இருக்கும் சிறப்பான குணத்தை வெளிப்படுத்துவது மிகவும் முக்கியம். போட்டிகளின்போது கண்டிப்பாக அழுத்தம் இருந்தது உண்மைதான். ஆனால், அழுத்தம் இருப்பது இயல்பே. எல்லோராலும் அழுத்தத்தைக் கையாள முடியாது. என்னைப் பொருத்தவரை, என்ன நடந்தாலும் பதற்றமடையாமல் மன உறுதியுடன் இருப்பது முக்கியம். கேப்டன் பொறுப்பிலிருந்து விலகும் எண்ணம் எனக்கு ஒருபோதும் வரவில்லை என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் 6 போட்டிகளில் 5 தோல்விகளைத் தழுவிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கடைசி 8 போட்டிகளில் 6 வெற்றிகளைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Kolkata Knight Riders captain Ajinkya Rahane has stated that the thought of stepping down from the captaincy never crossed his mind.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐபிஎல் கடைசி லீக் போட்டி: கே.எல்.ராகுல் அரைசதம்; ஆறுதல் வெற்றி யாருக்கு?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சு; பிளே ஆஃப் செல்வதற்கு வாய்ப்பிருக்கிறதா?

குஜராத் டைட்டன்ஸின் தோல்விக்கு காரணம் இதுதான்; பயிற்சியாளர் கூறியதென்ன?







