கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் தோல்வியடைந்ததற்கான காரணத்தை அந்த அணியின் உதவிப் பயிற்சியாளர் பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நேற்று (மே 16) நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 29 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நீடிக்கிறது.
இந்த நிலையில், அதிக அளவிலான கேட்ச்சுகளை தவறவிட்டதுதான் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தோல்விக்கு காரணம் என அந்த அணியின் உதவிப் பயிற்சியாளர் பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் ஃபீல்டிங்கின்போது நிறைய கேட்ச்சுகளை தவறவிட்டதுதான் தோல்விக்குக் காரணம் என நினைக்கிறேன். மிகவும் தரமான பேட்டர்களுக்கு எதிராக கேட்ச்சுகளை தவறவிட்டால், மீண்டும் வாய்ப்புகள் கிடைக்காது. கிடைத்த வாய்ப்புகளை குஜராத் டைட்டன்ஸ் சரியாக பயன்படுத்தியிருக்க வேண்டும். கேட்ச் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளாதது தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது என்றார்.
நேற்றையப் போட்டியின் முடிவுக்குப் பிறகு புள்ளிப்பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணி இரண்டாவது இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
The assistant coach of the Gujarat Titans has revealed the reason for the team's defeat in the match against the Kolkata Knight Riders.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குஜராத் டைட்டன்ஸின் தோல்விக்கு காரணம் இதுதான்: கிளன் பிலிப்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சு; பிளே ஆஃப் செல்வதற்கு வாய்ப்பிருக்கிறதா?

ஃபின் ஆலன், அங்க்ரிஷ் ரகுவன்ஷி அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு 248 ரன்கள் இலக்கு!








