மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆயுஷ் பதோனியை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கியது ஏன்? ரிஷப் பந்த் விளக்கம்!

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ஆயுஷ் பதோனியை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கியது ஏன் என அந்த அணியின் கேப்டன் ரிஷப் பந்த் விளக்கமளித்துள்ளார்.

News image

ஆயுஷ் பதோனி - படம் | லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எக்ஸ்)

Updated On :20 ஏப்ரல் 2026, 10:54 am

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ஆயுஷ் பதோனியை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கியது ஏன் என அந்த அணியின் கேப்டன் ரிஷப் பந்த் விளக்கமளித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நியூ சண்டீகரில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது.

இந்த நிலையில், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தோல்விக்கு இது ஒன்றுதான் காரணம் என எதையும் குறிப்பிட்டு கூறுவது மிகவும் கடினம் என அந்த அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: லக்னௌ அணியின் பந்துவீச்சாளர்கள் நன்றாக செயல்படுகிறார்கள். தோல்விக்கு இது ஒன்றுதான் காரணம் என குறிப்பிட்டு கூறுவது மிகவும் கடினம். அணியில் சில இடங்களில் இன்னும் முன்னேற்றம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு போட்டியிலும் நன்றாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் களமிறங்குகிறோம்.

மிட்செல் மார்ஷுடன் ஆயுஷ் பதோனியை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க வேண்டும் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. டாப் ஆர்டர் எந்த ஒரு அழுத்தமின்றி சுதந்திரமாக விளையாட வேண்டும் என நினைத்தோம். டாப் ஆர்டர் சுதந்திரமாக விளையாடி ரன்கள் குவித்தால் , மிடில் ஆர்டர் சிறப்பாக விளையாடுவார்கள். அதன் காரணமாகவே ஆயுஷ் பதோனி தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டார் என்றார்.

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

முந்தைய போட்டிகளில் லக்னௌ அணிக்காக மிட்செல் மார்ஷ் மற்றும் அய்டன் மார்க்ரம் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.

Summary

Team captain Rishabh Pant has explained why Ayush Badoni was sent out as an opener in the match against Punjab Kings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.