கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

புதிய கட்சி தொடங்குகிறேன் : கொடியை அறிமுகம் செய்த சசிகலா!

அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கூடிய கொடியை சசிகலா அறிமுகம் செய்தார்.

News image
கட்சிக் கொடியை அறிமுகம் செய்த சசிகலா- படம் - யூடியூப்
Updated On :24 பிப்ரவரி 2026, 2:44 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ராமநாதபுரத்தில் நடந்த மாநாட்டில் புதிய கட்சியை சசிகலா இன்று (பிப். 24) தொடங்கினார்.

மக்கள் நலனுக்காக புதிய கட்சியைத் தொடங்குகிறேன் எனக் கூறி, அண்ணா, எம்ஜி ஆர், ஜெயலலிதா படங்களுடன் கூடிய கொடியை அறிமுகம் செய்தார்.

கருப்பு, வெள்ளை, சிவப்பு என மூன்று நிறங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்ட கொடியின், நடுவில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெற்றுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோட்டைமேடு பகுதியில் களம் காண்போம் அம்மாவின் ஆட்சிமை அமைப்போம் என்ற பெயரில் சசிகலா தலைமையில் இன்று (பிப். 24) மாநாடு நடைபெற்றது.

மாநாட்டில் சசிகலா பேசியதாவது:

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சியில் ஏராளமான பிரச்னைகள் உருவாகின. முதல்வராக உட்கார வைத்தவர் என் முதுகில் குத்தினார். கட்சிக் கொடியை பயன்படுத்தக் கூடாது என்றனர். தேர்தல்களில் தொடர்ந்து 10 முறை தோல்வியை சந்தித்தவர் எடப்பாடி பழனிசாமி.

என் மீதுள்ள 12 வழக்குகளில் 11 வழக்குகளில் இருந்து விடுதலை ஆகிவிட்டேன். ஒரு வழக்கு மட்டுமே நிலுவையில் உள்ளது. சிறை நிர்வாகம் எனக்கு 15 நாள்கள் பரோல் கொடுத்தபோது தமிழக அரசு, 5 நாள்கள் மட்டுமே போதும் என்றது.

9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது. இனியும் அமைதியாக இருந்தால் அது தொண்டர்கள், மக்களுக்கு செய்யும் துரோகம்.

மக்கள் நலனுக்காக புதிய கட்சியை அறிவிக்கிறேன். எனது புதிய கட்சி அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் திராவிடக் கட்சியாக இருக்கும். அந்தக் கட்சியின் மூலம் ஜெயலலிதா வழியில் துரோகிகளை அழிப்போம்.

கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன். என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை. களம் காண்போம். நம் தலைவர்களின் பொற்கால ஆட்சியை அமைப்போம் எனக் குறிப்பிட்டு கொடியை அறிமுகம் செய்தார்.

தொடர்ந்து பேசிய சசிகலா, ''சாதி, மத பேதமற்ற தலைவர்கள் வாழ்ந்த பெருமைக்குரிய ராமநாதபுரம் மண்ணில் கொடியை அறிமுகம் செய்ததில் மகிழ்ச்சி'' எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.