/

அஜித்தின் அடுத்தப் படம்: போனி கபூர் புதிய தகவல்!

ஆகஸ்ட் 8 அன்று நேர்கொண்ட பார்வை படத்தை வெளியிட உழைக்கும் படக்குழுவினருக்கு நன்றி...

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:40 am

எழில்

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத், அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்கியுள்ளார். ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக நேர்கொண்ட பார்வை என்கிற இந்தப் படம் உருவாகியுள்ளது. அமிதாப் பச்சன் நடித்த வேடத்தில் அஜித் நடித்துள்ளார். இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். டிசம்பர் மாதம் இப்படம் பூஜையுடன் தொடங்கியது. ஏப்ரலில் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. 

இப்படத்துக்கு இசை - யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு - நிரவ் ஷா. பிரபல பாலிவுட் நடிகையும் தமிழ்ப் பெண்ணுமான வித்யா பாலன், முதல்முறையாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ஷரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக்ரவி, போன்றோரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

ஆகஸ்ட் 10 அன்று வெளியாவதாக முதலில் அறிவிக்கப்பட்ட இந்தப் படம் ஆகஸ்ட் 8 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அஜித்தின் அடுத்தப் படத்தையும் தயாரிக்கும் போனி கபூர், புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

ஆகஸ்ட் 8 அன்று நேர்கொண்ட பார்வை படத்தை வெளியிட உழைக்கும் படக்குழுவினருக்கு நன்றி. வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள அஜித் 60 படத்தை ஜீ ஸ்டூடியோஸுடன் இணைந்து தயாரிக்கிறோம். பூஜையும் படப்பிடிப்பும் ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.