/

நான் நானாக இருக்கப்போகிறேன்: பிக் பாஸுக்குள் நுழைந்தார் நடிகை விஜயலட்சுமி!

இந்த நிகழ்ச்சியில் நான் நானாக இருக்கப் போகிறேன். அனைவரும் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று...

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:34 pm

எழில்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை விஜயலட்சுமி வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்துள்ளார்.

இரு மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் வைல்ட் கார்ட் எண்ட்ரி போட்டியாளர் விஜயலட்சுமி. இவர், இயக்குநர் அகத்தியனின் மகள்.

இந்த நிகழ்ச்சியில் நான் நானாக இருக்கப் போகிறேன். அனைவரும் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார் விஜயலட்சுமி. 

சென்னை 28 படத்தின் மூலம் பிரபலமான நடிகை விஜயலட்சுமி, இயக்குநர் ஃபெரோஸ் முகமதுவை நீண்ட காலமாக காதலித்து வந்தார். இவர்களுடைய திருமணம் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. விஜயலட்சுமி - ஃபெரோஸ் தம்பதியருக்கு நிலன் என்கிற ஒரு மகன் உண்டு.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.