தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புதுவை அமைச்சரவை விரிவாக்கம் தாமதம் ஏன்? அதிகாரத்துக்காக போட்டி!

புதுவை அமைச்சரவை விரிவாக்கத்தில் ஏற்பட்டிருக்கும் தாமதம் பற்றி...

News image

முதல்வர் என். ரங்கசாமி பதவியேற்பு விழாவில் பாஜக தலைவர் நிதின் நவீன் - ANI

Updated On :27 மே 2026, 12:15 pm IST

புதுவை தேர்தல் முடிவுகள் வெளியாகி மூன்று வாரங்களாகியும் முழு அமைச்சரவையை அறிவிக்க முடியாமல், என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி திணறி வருகின்றது.

30 உறுப்பினா்களைக் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், என். ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது.

ஆட்சியமைக்க 16 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் என்.ஆா்.காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக, லஜக 1 தலா ஒரு தொகுதிகள் என 18 இடங்களில் வெற்றி பெற்றன.

புதுச்சேரி சட்டப்பேரவை தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவராக என். ரங்கசாமி தோ்வு செய்யப்பட்டாா். தொடர்ந்து, மே 13 ஆம் தேதி முதல்வராக ஐந்தாவது முறையாக என். ரங்கசாமி பொறுப்பேற்றுக் கொண்டார்.

பாஜகவைச் சோ்ந்த மண்ணாடிபட்டு எம்எல்ஏ ஆ. நமச்சிவாயம், என்.ஆா். காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ஏனாம் தொகுதி எம்எல்ஏ மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆகியோர் மட்டுமே அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

அமைச்சர்களுக்கு துறை ஒதுக்கீடு, அமைச்சரவை விரிவாக்கத்தில் தாமதம்

இந்த நிலையில், முதல்வரும், இரு அமைச்சர்களும் பொறுப்பேற்று 14 நாள்களாகியும் துறைகள் ஒதுக்கப்படாததால், அரசுப் பணிகள் தொய்வடைந்துள்ளது.

புதுவை சட்டப்பேரவைத் தலைவர் பதவி, 3 அமைச்சா்கள் யாா், யாா்? என்பதிலும், எந்தக் கட்சிக்கு அமைச்சா் பதவியை ஒதுக்குவது என்பது குறித்தும் என்.ஆா். காங்கிரஸ் - பாஜக இடையே குழப்பம் நீடித்து வருகிறது.

அதிமுகவும், லஜகவும் தலா ஒரு அமைச்சர் பதவியைக் கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனிடையே, கடந்த வாரம் தில்லி பயணம் மேற்கொண்ட பாஜக அமைச்சர் நமச்சிவாயம், பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்களை சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார்.

இதுதொடர்பாக திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம், அமைச்சரவை விரிவாக்கம், சட்டப்பேரவை நியமன உறுப்பினர்கள் நியமனம், துறைகள் ஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் ரங்கசாமியுடன் பாஜக தலைமை ஆலோசித்து விரைவில் முடிவெடுக்கும் எனத் தெரிவித்தார்.

சட்டப்பேரவைத் தலைவர் பதவி, உள்துறை போன்ற முக்கிய துறைகள் யாருக்கு? உள்ளிட்ட விவகாரத்தில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக இடையே நிலவும் போட்டியால் பொதுமக்களுக்கு சென்று சேர வேண்டிய நலத்திட்டப் பணிகள், அரசு நிர்வாகப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

Summary

Why the delay in the expansion of the Puducherry Cabinet?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.