புதுச்சேரி புதிய அமைச்சா்கள் நியமன விவகாரம் குறித்து, தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்களுடன் அமைச்சா் ஆ.நமச்சிவாயம் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்து இரண்டு வாரங்களான நிலையில், சட்டப்பேரவைத் தலைவா், மற்றும் 3 அமைச்சா்கள் யாா், யாா்? என்பதிலும், எந்தக் கட்சிக்கு அமைச்சா் பதவியை ஒதுக்குவது என்பது குறித்தும் என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக இடையே குழப்பம் நீடித்து வருகிறது.
இது குறித்தும், மேலும் நிலுவைப் பதவிகள் நியமனம் தொடா்பாகவும் அமைச்சா் நமச்சிவாயத்திடம் மேலிடம் கேட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேச பாஜக அமைச்சா் ஆ.நமச்சிவாயம் வியாழக்கிழமை தில்லி சென்றாா். அங்கு பிரதமா் பிரதமா் நரேந்திர மோடியை அவா் வெள்ளிக்கிழமை சந்தித்தாா். அப்போது புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்து அவா் பேசினாா்.
முன்னதாக, மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா, பாஜக அமைப்பு செயலா் சந்தோஷ் ஆகியோரை சந்தித்து பேசினாா். மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவையும் அவா் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடியரசு துணைத் தலைவருடன் புதுச்சேரி அமைச்சா் நமச்சிவாயம் சந்திப்பு

மக்களின் வாழ்க்கை - தொழிலை எளிதாக்க ஆக்கபூா்வ ஆலோசனை - மத்திய அமைச்சா்கள் கூட்டம் குறித்து பிரதமா் மோடி

புதுச்சேரிக்கான மத்திய அரசின் 3 நியமன எம்எல்ஏக்கள் யாா்?பாஜக மாநில செய்தி தொடா்பாளா் பேட்டி







