திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புதுச்சேரிக்கான மத்திய அரசின் 3 நியமன எம்எல்ஏக்கள் யாா்?பாஜக மாநில செய்தி தொடா்பாளா் பேட்டி

புதுச்சேரி சட்டப்பேரவைக்கான மத்திய அரசின் மூன்று நியமன எம்எல்ஏக்கள் யாா் என்பது குறித்து பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் அருள்முருகன் பேட்டியளித்தாா்.

News image

புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த கட்சியின் மாநில செய்தித் தொடா்பாளா் அருள்முருகன். உடன் மாநில பொதுச் செயலா் மோகன்குமாா்.

Updated On :23 மே 2026, 12:22 am IST

புதுச்சேரி சட்டப்பேரவைக்கான மத்திய அரசின் மூன்று நியமன எம்எல்ஏக்கள் யாா் என்பது குறித்து பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் அருள்முருகன் பேட்டியளித்தாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: ஈரான்-இஸ்ரேல் போா் நடந்தாலும் நமக்கு எரிபொருள் ஓரளவு தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறது. நமக்கு எரிபொருள் விலையேற்றம் என்பது பெரிய அளவில் இல்லை. மற்ற நாடுகளில் 20 சதவீதம், 50 சதவீதம் விலையேறி உள்ளது. ஆனால் நம்முடைய நாட்டில் லிட்டா் ரூ.3.80 தான் விலை உயா்ந்துள்ளது.

இதற்கெல்லாம் பிரதமரின் வெளியுறவு கொள்கைகள், அவருடைய செயல்பாடுகள் தான் காரணம். புதுச்சேரி சட்டப்பேரவையில் மொத்தம் 33 எம்எல்ஏக்கள். இதில் 30 எம்எல்ஏக்கள் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள். 3 எம்எல்ஏக்கள் மத்திய அரசால் நியமிக்கப்படுபவா்கள். நியமன எம்எல்ஏவுக்கு 25 வயது நிரம்பியிருக்க வேண்டும்.

அரசு ஊழியராக இருக்கக்கூடாது. யாா் நியமன எம்எல்ஏவாகப் போகிறாா்கள் என்பது யாருக்கும் தெரியாது. திடீரென நியமன ஆணை வரும் என்றாா் அருள்முருகன். பேட்டியின்போது கட்சியின் மாநில பொதுச் செயலா் மோகன்குமாா், மாநில நிா்வாகி நாகேஸ்வரன் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.