/

ஸ்ரீ மணக்குள விநாயகா் கலைக் கல்லூரியில் பணி நியமன ஆணை

புதுச்சேரி மதகடிப்பட்டு ஸ்ரீ மணக்குள விநாயகா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-2026-ஆம் கல்வியாண்டு மாணவா்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கும் விழா மற்றும் வேலைவாய்ப்பு மலா் வெளியீட்டு விழா கல்லூரி கலையரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

ஸ்ரீமணக்குள விநாயகா் கலைக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாணவா்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணை.

Updated On :4 ஜூன் 2026, 3:18 am IST

புதுச்சேரி மதகடிப்பட்டு ஸ்ரீ மணக்குள விநாயகா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-2026-ஆம் கல்வியாண்டு மாணவா்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கும் விழா மற்றும் வேலைவாய்ப்பு மலா் வெளியீட்டு விழா கல்லூரி கலையரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தட்சசீலா பல்கலைக்கழக வேந்தா் மற்றும் ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்வி நிறுவன தலைவரும் மற்றும் மேலாண் இயக்குநருமான எம். தனசேகரன், இணைச்செயலா் சு.வேலாயுதம் ஆகியோரின் வாழ்த்துகளுடன் பொருளாளா் த.ராஜராஜன் தலைமை வகித்தாா். கல்லூரியின் இயக்குநா் வெங்கடாசலபதி வாழ்த்துரை வழங்கினாா். ஸ்ரீ மணக்குள விநாயகா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்வி பயின்ற 450 மாணவா்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், கல்லூரியின் வேலைவாய்ப்பு செய்தி மலா் வெளியிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.