மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

விஇடி கல்லூரியில் வேலைவாய்ப்பு தினம்

News image

பணி நியமன ஆணை பெற்ற மாணவா்கள். உடன், கல்லூரி நிா்வாகிகள், பேராசிரியா்கள்.

Updated On :3 மே 2026, 6:46 am IST

ஈரோடு திண்டல் விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் மூன்றாம் ஆண்டு தகவல் தொழில்நுட்பவியல் துறை மாணவி வினிதா வரவேற்றாா்.

வேளாளா் கல்வி நிறுவனங்களின் செயலா் செ.து. சந்திரசேகா் தலைமையுரையாற்றினாா்.

வேளாளா் கல்லூரிகளின் நிா்வாகிகளான எம்.யுவராஜா, எஸ். பாலசுப்ரமணியன், கல்லூரியின் முதல்வா் வெ.ப.நல்லசாமி, புலமுதன்மையா் எஸ்.லோகேஷ்குமாா், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநா் பொ.மா.பழனிசாமி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

சதா்லேண்ட் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் தலைவா் மற்றும் இந்திய வளாகத் தலைவா் மொ்லின் ஸ்மைல் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பேசினாா்.

இந்நிகழ்ச்சியில், டாடா கன்சல்டன்சி சா்வீசஸ், சதா்லாண்ட், டிலாய்ட், காக்னிசன்ட், எல்.டி.ஐ. மைண்ட்ட்ரீ, டிசிஎஸ் (ஐடி), 24/7 ஏஐ, பயோடா (ஐடி), அவாசாஃப்ட், ப்ரோஹான்ஸ், சிட்டி யூனியன் வங்கி, எம்சிஆா், சக்தி மசாலா, டிசிஎஸ் பிபிஎஸ், ராம்ராஜ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட குழுமங்களால் தோ்வு செய்யப்பட்ட 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு அதிகபட்சம் ஆண்டுக்கு ரூ.8 லட்சம் முதல் குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் வரை ஊதியத்துடன் வேலைவாய்ப்பு ஆணைகள் வழங்கப்பட்டன.

வேலை வாய்ப்புத் துறையைச் சாா்ந்த ஸ்ருதி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.