தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம் என்று திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகரை தவெக தலைவர் விஜய் புதன்கிழமை (மே 6) சந்தித்து உரிமை கோரினார்.
அப்போது, தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க 118 எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை வழங்க வேண்டும் என்று விஜய்யிடம் ஆளுநர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வியாழக்கிழமை (மே 7) காலை மீண்டும் தவெக தலைவர் விஜய் ஆளுநரைச் சந்த பிறகு, ஆளுநர் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. மேலும், ஆட்சியமைக்க 118 எம்.எல்.ஏ.க்களின் பட்டியல் கட்டாயம் என்பதை ஆளுநர் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பேசிய, திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், “தவெக முதலில் 107 இடங்களுடன் ஆளுநரை அணுகியிருந்தால், ஆளுநர் அவர்களை அழைத்திருப்பார். ஆனால், தவெக தங்களோடு வேறு ஒரு கட்சியைச் சேர்த்துக்கொண்டதால் இடங்களின் எண்ணிக்கை 112 ஆகிறது. அதனால், அவர்களுக்குப் பெரும்பான்மை இல்லை என்று ஆளுநர் நிச்சயமாகச் சொல்வார்.
தவெக மட்டும் சென்றிருந்தால், தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைத்து, பின்னர் சட்டபேரவையில் தங்கள் பலத்தை நிரூபிக்குமாறு ஆளுநர் அவர்களை அழைத்திருப்பார். இப்போது தவெகவுக்கு சில கட்சிகளின் ஆதரவு கிடைத்திருப்பதால், அரசாங்கம் தனிப்பெரும்பான்மைக்காகக் காத்திருக்கும்” எனத் தெரிவித்தார்.
Summary
DMK spokesperson T.K.S. Elangovan has stated that the TVK could have formed the government had it approached the Governor independently.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆளுநரைச் சந்தித்தபோது விஜய்யுடன் சென்ற இவர் யார்?

113 பேருடன் எப்படி ஆட்சி அமைப்பீர்கள்? ஆளுநரின் கேள்விகளுக்கு விஜய் விளக்கம்!

ஆளுநர் மாளிகையில் காத்திருக்கும் விஜய்!

ஆளுநருடன் விஜய் இன்று சந்திப்பு?
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


