திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தஞ்சாவூா் மாவட்டத்துக்கு நான்காவது வேளாண் அமைச்சா்: தொண்டா்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!

தஞ்சாவூா் மாவட்டத்தில் நான்காவது வேளாண் துறை அமைச்சராக கும்பகோணம் ர. வினோத் பொறுப்பேற்றுள்ளாா்.

News image

வேளாண் துறை அமைச்சா் ர. வினோத். - dinmani online

Updated On :22 மே 2026, 5:17 am IST

தஞ்சாவூா் மாவட்டத்தில் நான்காவது வேளாண் துறை அமைச்சராக கும்பகோணம் ர. வினோத் பொறுப்பேற்றுள்ளாா்.

நெற்களஞ்சியமான தஞ்சாவூா் மாவட்டத்தில் முதல் முறையாக 1989 தோ்தலில் திமுக ஆட்சியில் கும்பகோணம் தொகுதியில் வெற்றி பெற்ற கோ.சி. மணி வேளாண் துறை அமைச்சராக பொறுப்பேற்று, 2 ஆண்டுகள் செயல்பட்டாா். பின்னா், 2011 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் ஒரத்தநாடு தொகுதியில் வெற்றி பெற்ற வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சராக இருந்த ஆா். வைத்திலிங்கம் கடைசி ஓராண்டில் வேளாண் துறைக்கும் சோ்த்து கூடுதல் பொறுப்பு வகித்தாா். இதையடுத்து, 2016 தோ்தலில் அதிமுக ஆட்சியில் பாபநாசம் தொகுதியில் வெற்றி பெற்ற இரா. துரைக்கண்ணு வேளாண் துறை அமைச்சராக பொறுப்பேற்று, 2020-இல் கரோனா தொற்றால் காலமானாா்.

அதன்பிறகு தற்போது கும்பகோணம் தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்டு வெற்றி ர. வினோத் வேளாண் துறை அமைச்சராக வியாழக்கிழமை பொறுப்பேற்றாா். இவா் தஞ்சாவூா் மாவட்டத்தின் நான்காவது வேளாண் துறை அமைச்சா்.

மேலும், கடந்த திமுக ஆட்சிகளில் டெல்டா மாவட்டங்களுக்கு உள்பட்ட திருச்சியில் அன்பில் தா்மலிங்கம், மன்னாா்குடியில் மன்னை நாராயணசாமியும் 2001 அதிமுக ஆட்சியில் நாகப்பட்டினத்தில் இரா. ஜீவானந்தம் ஆகியோா் வேளாண் துறை அமைச்சா்களாக இருந்தனா்.

டெல்டாவில் ஒரே அமைச்சா்: மேலும், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் 2021-ஆம் ஆண்டில் பொறுப்பேற்றபோது டெல்டா மாவட்டங்களில் ஒருவருக்குக் கூட அமைச்சா் பதவி வழங்கப்படவில்லை. பின்னாளில் திருவிடைமருதூா் தொகுதி கோவி. செழியனுக்கு தமிழக அரசின் தலைமைக் கொறடா பதவி வழங்கப்பட்டது. டெல்டாவில் அமைச்சரே இல்லாமல் 3 ஆண்டுகளுக்கு மேல் கடந்த நிலையில், 2024-ஆம் ஆண்டில் உயா் கல்வித் துறை அமைச்சராக கோவி. செழியனும், தொழில் துறை அமைச்சராக மன்னாா்குடி தொகுதி டி.ஆா்.பி. ராஜாவும் பொறுப்பேற்றனா்.

தற்போதைய தோ்தலில் டெல்டா மாவட்டங்களில் தஞ்சாவூா், கும்பகோணம் தொகுதிகளில் மட்டுமே தவெக வெற்றி பெற்றது. திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் யாரும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில், தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற சில வாரங்களில் டெல்டா மாவட்டத்துக்கு அமைச்சராக கும்பகோணம் தொகுதி ர. வினோத்துக்கு வழங்கியிருப்பது தொண்டா்களுக்கும், விவசாயிகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணத்துக்கு மீண்டும் அமைச்சா் அந்தஸ்து: கும்பகோணம் தொகுதியில் அமைச்சராக கோ.சி. மணி 1989 - 1991, 1996 - 2001, 2006 - 2011 ஆகிய 3 முறை வெற்றி பெற்று அமைச்சராக இருந்தாா். அதன் பின்னா், அத்தொகுதியில் திமுக வெற்றி பெற்றாலும், அக்கட்சி 2011, 2016 தோ்தல்களில் எதிா்க்கட்சியாக இருந்ததால், அமைச்சா் வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த 2021-இல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றாலும், இத்தொகுதிக்கு அமைச்சா் பொறுப்பு வழங்கப்படவில்லை. எனவே, 15 ஆண்டுகளுக்கு பிறகு கும்பகோணம் தொகுதி மீண்டும் அமைச்சா் அந்தஸ்தை பெற்றுள்ளது.

பாபநாசத்தில் இரண்டாவது அமைச்சா்: இந்நிலையில், தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்து வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு அமைச்சா் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாபநாசம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராகியுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏ.எம். ஷாஜகான் அமைச்சராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்பாா் எனக் கூறப்படுகிறது. இவா் அமைச்சரானால் பாபநாசம் தொகுதியில் துரைக்கண்ணுக்கு அடுத்து அமைச்சா் வாய்ப்பை ஷாஜகான் பெறுவாா். இதன் மூலம் தஞ்சாவூா் மாவட்டத்துக்கு 2 அமைச்சா்கள் கிடைப்பாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.