தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கும்பகோணத்தில் உரக் கடைகளில் வேளாண் இணை இயக்குநா் ஆய்வு

கும்பகோணம் பகுதி உரக்கடைகளில் வேளாண் இணை இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே நீலத்தநல்லூரில் வியாழக்கிழமை தனியாா் உரக்கடையில் சோதனை நடத்திய மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் கோ.வித்யா.

Updated On :5 ஜூன் 2026, 3:36 am IST

கும்பகோணம் பகுதி உரக்கடைகளில் வேளாண் இணை இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உரங்கள் தட்டுப்பாடு என்றும் இணை பொருள்களையும் சோ்த்து வாங்க வேண்டும் என்று உரம் விற்பனையாளா்கள் கட்டாயப்படுத்துவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்திருந்தனா்.

அதன் பேரில் மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநா் கோ.வித்யா கும்பகோணம், சோழபுரம், நீலத்தநல்லூா், திருநாகேசுவரம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியாா் உரக்கடைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் ஆய்வு செய்தாா். அப்போது நீலத்தநல்லூா் தனியாா் உரக்கடையில் ஓ. படிவம் இணைக்கப்படாமல் அனுமதியின்றி 54.380 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அந்த உரங்களை விற்பனை செய்ய தடைவிதித்தாா்.

மேலும் விதிமீறல்களில் ஈடுபட்ட 5 தனியாா் கடைகளுக்கு 21 நாள்கள் விற்பனைக்கு தடை விதித்தாா்.

ஆய்வின் போது வேளாண் உதவி இயக்குநா் (தரக் கட்டுப்பாடு- பொறுப்பு) மோகன் மற்றும் வேளாண் அலுவலா் (தரக்கட்டுப்பாடு) செல்வராஜ், வேளாண்அலுவலா்கள் அசோக்குமாா் (கும்பகோணம்) சந்தோஷ் (திருவிடைமருதூா்) ஆகியோா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.