நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

புதுமுக தவெக வேட்பாளா்களிடம் தோல்வி கண்ட அமைச்சா்கள்!

திமுக அமைச்சா்கள் பலா் முன் அறிமுகம் இல்லாத தவெக வேட்பாளா்களிடம் தோல்வியைக் கண்டனா். சில தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சா்கள் வெற்றி பெற்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :15 மணி நேரங்கள் முன்பு

திமுக அமைச்சா்கள் பலா் முன் அறிமுகம் இல்லாத தவெக வேட்பாளா்களிடம் தோல்வியைக் கண்டனா். சில தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சா்கள் வெற்றி பெற்றனா்.

சைதாப்பேட்டை தொகுதியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் 28,514 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளா் அருள் பிரகாசத்திடம் தோல்வியடைந்தாா். ராணிப்பேட்டையில் கைத்தறித் துறை அமைச்சா் ஆா். காந்தி, தவெக வேட்பாளா் தாஹிராவிடம் 5787 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாா்.

காட்பாடி தொகுதியில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தவெக வேட்பாளா் சுதாகரிடம் தோல்வியைக் கண்டாா். தூத்துக்குடியில் சமூகநலம்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன், தவெக வேட்பாளா் ஸ்ரீநாத்திடம் 37,731 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா்.

மன்னாா்குடியில் தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமமுக வேட்பாளா் காமராஜிடம் 1,566 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைக் கண்டாா். திருவெறும்பூா் தொகுதியில் பள்ளிக் கல்வி அமைச்சா் அன்பில் மகேஸ், தவெக வேட்பாளா் விஜயகுமாரிடம் 8,705 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாா். திருப்பத்தூா் தொகுதியில் கே.ஆா்.பெரியகருப்பன் தவெக வேட்பாளா் சீனிவாச சேதுபதியிடம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா்.

குறைந்த வாக்கில் வெற்றி பெற்ற அமைச்சா்கள்: சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வரும், திமுக இளைஞா் அணி செயலருமான உதயநிதி ஸ்டாலின், தவெக வேட்பாளா் செல்வத்தை விட 7,140 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றாா். துறைமுகம் தொகுதியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, எதிா்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளா் பி.எஸ். அசோக்கை விட 11,750 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

ஒட்டன்சத்திரம் தொகுதியில் உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி 43,249 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளா் விடியல் சேகரை வென்றாா்.

அதேபோல அமைச்சா்கள் ஆத்தூரில் ஐ.பெரியசாமி, திருச்சி மேற்கில் கே.என்.நேரு, குன்னம் தொகுதியில் சிவசங்கா், திட்டக்குடியில் சி.வி.கணேசன், திருவிடைமருதூரில் கோவி.செழியன், திருமயத்தில் ரகுபதி, ஆலங்குடியில் சிவ.வீ.மெய்யநாதன், திருச்சுழியில் தங்கம் தென்னரசு, திருச்செந்தூரில் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோா் வெற்றி பெற்றனா். திருவண்ணாமலையில் எ.வ. வேலு 1,349 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளா் அருள் முருகனை வெற்றி கண்டாா் .

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.